ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் டில்லியில் முதல் ஆலோசனை கூட்டமாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 24, 2023

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் டில்லியில் முதல் ஆலோசனை கூட்டமாம்

புதுடில்லி செப் 24 - ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ஆராய அமைக் கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் டில்லியில்23.9.2023 அன்று நடைபெற்றது. 

மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்க ளின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற் பட்ட உள்ளாட்சிப் பத விகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆய்வு செய்ய மேனாள் குடிய ரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த 2-ஆம் தேதி உயர் நிலைக் குழு அமைக்கப் பட்டது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநி லங்களவை மேனாள் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆணைய மேனாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை மேனாள் செயலர் சுபாஷ் கே காஷ்யப், மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத் தாரி ஆகியோர் உறுப்பி னர்களாக நியமிக்கப்பட் டனர். ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், உயர் நிலைக் குழுவின் கூட் டங்களில் சிறப்பு அழைப் பாளராகப் பங்கேற்பார். ஒன்றிய சட்டத் துறைச் செயலர் நிதின் சந்திரா, குழுவின் செயலராகப் பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது.

அதேநேரத்தில், இந்த திட்டத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இத னால் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குழுவில் உறுப் பினராக இடம்பெற மறுத்துவிட்டார். இந்தச் சூழலில், மேனாள் குடி யரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையி லான உயர்நிலைக் குழு வின் முதல் கூட்டம் டில் லியில் நேற்று நடை பெற்றது. இதில் ஆதிர் ரஞ்சனைத் தவிர்த்து, மற்ற உறுப்பினர்கள் பங் கேற்றனர்.

சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத் தில் பல்வேறு விவகாரங் கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும் பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டால் எவ் வாறு செயல்பட வேண் டும். மக்களவை, சட்டப் பேரவைகளில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அரசுகள் கவிழ்ந்தால் எவ்வாறு செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோ சனை நடத்தப்பட்டது. மேலும், ஒன்றிய சட்ட ஆணையம், தலைமை தேர்தல் ஆணையம், அர சியல் கட்சிகளின் கருத்து களைக் கேட்டறிய கூட் டத்தில் முடிவு செய்யப் பட்டது.

No comments:

Post a Comment