கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
27.9.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், பல்வேறு ஜாதிகளின் இட ஒதுக்கீடு, பொருளாதார நிலைமை குறித்து முடிவெடுக்க முடியும் என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பஞ்சாப் மாநில பாஜக நிர்வாகியும் மேனாள் அமைச்சருமான மன்பீத் பாதல் மீது ஊழல் வழக்கு பதிவு, தேடப்படும் நபராக பதிந்தா நீதிமன்றம் அறிவிப்பு.
தி ஹிந்து:
* இந்திய ரிசர்வ் வங்கியின் மேனாள் கவர்னர் உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியில் இருந்து விலகியது தொடர்பாக மேனாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கர்க் தனது நூலில் வெளியிட்ட செய்திகள் குறித்து மோடி அரசு மீது காங்கிரஸ் தாக்கு.
* மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலுக் காக பாஜக அளித்துள்ள இரண்டாவது வேட்பாளர் பட்டியல், கட்சி வெற்றி பெற்றால், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மாநிலத்தின் உயர் பதவிக்கு தானாக தேர்வு செய்ய மாட்டார் என்பதாக தெரிகிறது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அக்டோபர் 14-ஆம் தேதி திமுக மகளிரணி நடத்துகிறது. சோனியா காந்தி, பிரியங்கா, சுப்ரியா சுலே, மெக்பூபா முப்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
தி டெலிகிராப்:
* எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க நான் உழைத்துள் ளேன்: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்புவது குறித்து வதந்திகளை நிதீஷ் குமார் மறுப்பு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மூன்று பெண் அர்ச்சகர்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்ததையடுத்து, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை அய்ந்து பெண் ஓதுவார்கள் உட்பட 15 ஓதுவார்களை நியமித்தது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment