மகளிர் உரிமைத்தொகை - நாளை முதலமைச்சர் ஆலோசனை!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 10, 2023

மகளிர் உரிமைத்தொகை - நாளை முதலமைச்சர் ஆலோசனை!!

சென்னை, செப் 10- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் மாதந்தோறும் மகளிருக்கு 1000 ரூபாய் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  

விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் கடந்த  24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாகவும் மற்றும் விடுபட்டவர் களுக்கான சிறப்பு முகாம்களும் தொடர்ந்து நடத்தப் பட்டு 20.08.2023 அன்றுடன் விண்ணப்பங்கள் பதியும் பணி நிறைவடைந்தது. கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 65 ஆயிரம்  குடும்பத்தலைவிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப் பட்டது.

அத்துடன் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டு மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.  இந்த சூழலில்   பேரறிஞர் அண்ணா  பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாளில்  'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ தொடங்கப்பட உள்ளது.

இதன் காரணமாக  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக வீடு வீடாக விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கலைஞர்  மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து செப்டம்பர் 11ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிக் கட்ட ஆலோசனை மேற் கொள்கிறார். ரூபாய் 1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சுமார் 5 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment