திருமானூர்,செப்.9- அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் கிளைக் கழக வாரியாக சந்திப்பு நிகழ்ச்சி 7.9. 2023 வியாழக்கிழமையன்று மாலை 5 மணி அளவில் குலமாணிக்கம் பேராசிரியர் இ.வளனறிவு இல்லத்தில் தொடங்கியது. தந்தைப் பெரியார்பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் கழகக் கொடி ஏற்றுவது குறித்தும் உரையாடிய பின்னர் பேராசிரியர் இல்லத்தில் அவரது சிறப்பான நூலகத்தைப் பார்வையிட்டோம்.
இலந்தை கூடம் கிராமத்திற்கு 5.30மணியளவில் சென்றுபெரியார் பெருந்தொண்டர் மைனர் இல்லத்தில் சந்திப்பும், பின்னர்அங்கு அமைந்துள்ள படிப்பகத்தையும் பார்வையிட்டு, மாலை 6 மணிக்கு திருமானூர் ஒன்றிய செயலாளர் பெ. கோபிநாதன் இல்லத்தில் கிளைக் கழக சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
6.45 மணிக்கு அரண்மனை குறிச்சி முருகேசன் இல்லத்திலும், இரவு 7.15 மணிக்கு அன்னி மங்கலம் பார்த்திபன்இல்லத்திலும் சந்திப்பு நடைபெற்றது. 7.45 மணிக்கு திருமானூர் சேகர் இல்லத்தில் சந்திப்பு நிகழ்ச்சியும் திருமானூர் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டமும் நடைபெற்றது. அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளை இனிப்புகள் வழங்கி, கழகக் கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடுவது எனவும் இயக்கக் பணிகளை தீவிரப்படுத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டது.
அனைத்துக் கூட்டங்களிலும் தலைமைக் கழக அமைப்பாளர்க. சிந்தனைச் செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன் ,மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன் ,காப்பாளர் சு. மணிவண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் மா. சங்கர் ,ஒன்றிய தலைவர் க.சிற்றரசு, ஒன்றிய செயலாளர் பெ. கோபிநாதன் பெரியார் பெருந்தொண்டர் க.மைனர், ஒன்றிய அமைப்பாளர் சு.சேகர் ஆகியோர் பங்கேற்றனர். அனைத்து கிளைக் கழகங்களிலும் தோழர்களின் வீடுகளிலும் மகிழ்ச்சி பொங்க இயக்கப் பொறுப்பாளர்களை வரவேற்றனர்.
No comments:
Post a Comment