இதுவரை 20 அமினோ அமிலங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் 11 அமினோ அமிலங்களை உடலே உற்பத்தி செய்யும். எஞ்சிய 9 அமினோ அமிலங்களை உணவு மூலமாகவே உடல் பெற முடியும்.
இந்த அத்தியாவசிய 9 அமினோ அமிலங்கள் கொண்ட ஒரே உணவுப் பொருள் முட்டை என்று கூறலாம். முட்டை ஒரு முழுமையான ஊட்டச்சத்து மிக்க உணவு. உடலுக்குத் தேவையான புரோட்டீனை எளிதாகப் பெற உதவுகிறது. இதில் ஏ, டி, ஈ, கே, பி2, பி6, பி12 ஆகிய வைட்டமின்களும், செலினியம், ஜிங்க், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் உள்ளன.
முட்டை ஒரு முழுமையான புரதம் மிக்க உணவு. எனவே, இதனை தினமும் சாப்பிடலாம். தினமும் சராசரியாக முட்டை எடுத்துக் கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைந்துள்ளது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. முட்டை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று சிலர் கூறுவதுண்டு.
ஆனால் உண்மையில் முட்டை உடல் எடையைக் குறைக்கிறது. முட்டையை தனியாக சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்து கிடைப்ப துடன் உடல் எடையைக் குறைக்கும்.
இது உடலில் ஹெச்டிஎல் எனும் அமிலச் சுரப்பை அதிகரித்து கொழுப் பைக் கரைக்கிறது. பசியைக் குறைக்கிறது. கலோரி குறைவு என்பதாலும் உடல் எடை அதிகரிக்காது. எனவே, முடிந்த வரை மற்ற உணவுடன் முட்டை சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலர் உடல் எடையை காரணம் காட்டி முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடு வார்கள். இது முற்றிலும் தவறு.
முட்டையில் உள்ள கொழுப்பு நல்ல கொழுப்பு என்பதால் அது உடலுக்குத் தேவையானது. முட்டையில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்ற கொழுப்பு அமிலம் உள்ளதால் உடல் எடையைக் குறைப்பதுடன் இதயத்தை பாதுகாக்கிறது. மேலும் முட்டையில் நோயை எதிர்க்கக் கூடிய சத்துகள் உள்ளன.
எவ்வளவு சாப்பிடலாம்?
பெரியவர்கள் நாள் ஒன்றுக்கு 2-3 முட்டை தாராளமாக சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் தினமும் ஒன்று கொடுக்கலாம் என்கின்றனர் மருத்து வர்கள். அதேநேரத்தில் முட்டையை வேகவைக்காமல் சாப்பிடுவது தொற்றை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர். அதாவது ஹாப்-பாயில், அப்படியே குடிப்பதைத் தவிர்க்கவும். மாறாக முட்டையை அவித்தோ, ஆம்லெட் அல்லது பொடி மாஸ் செய்தோ சாப்பிட லாம். அதாவது முழுவதுமாக வேக வைத்து சாப்பிடலாம்.
ஆப்பாயில் முறையில் முட்டை சாப்பிடுவது உடலுக்கு கேடு விளை விக்கும் தெரியுமா? இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முட்டையை வேக வைக்காமல், பச்சையாக பயன்படுத்தினால் உடலுக்கு அதிகச் சத்து கிடைப்பதாக நம்பி பலரும் பச்சை முட்டையைக் பயன்படுத்து கின்றனர்.இது ஆபத்தானது. ஏனென்றால் பச்சை முட்டையின் வெள்ளைக்கருவில் அவிடின் எனும் புரதச்சத்து உள்ளது.இது முட்டையில் உள்ள பயாட்டின் எனும் சத்ததுடன் சேரும் போது பயாட்டின் சத்து சிறுகுடலில் உறிஞ்சப்படுவது தடைப்படுகிறது.
ஆனால் முட்டையை வேக வைக்கும் போது இந்த அவிடின் சத்து அழிந்துவிடும். இதனால் முட்டையில் உள்ள பயாட்டின் முழுமையாக நமக்கு கிடைத்துவிடும்.அவிடின் சத்தைவிட பயாட்டின் சத்து தான் நமக்கு கிடைக்க வேண்டியது. இந்த சத்து தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
ஆகவே, வேகவைத்த முட்டையைச் சாப்பிடுவதே சிறந்தது.மேலும் பச்சை முட்டை, பால், இறைச்சி போன்ற சமைக்க படாதா உணவுகளில் சால் மோனல்லா போன்ற பாக்டீரியா கிருமிகள் இருக்கும்.
இதனால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். சில நேரங்களில் டைபாய்டு போன்ற தீவிரமான காய்ச்சலையும் ஏற்படுத்தும். இதனால் நன்கு வேக வைத்து சாப்பிடுவது நமது உடலுக்கு நல்லது.
அதே போல் ஆப்பாயில் போட்டு முட்டையை சாப்பிடும் போது சால் மோனல்லா போன்ற பாக்டீரியா கிரு மிகள் அழிந்து விடாது. இதனால் உடல் நலத்திற்கு தீங்கை ஏற்படுத்தும். ஆகவே நன்கு வேக வைத்து சாப்பிடுவது தான் சிறந்தது.
மேலும் கோழிப் பண்ணையை எடுத்துக் கொண்டால் பெரும்பாலான கோழிகள் ஹார்மோன் ஊசி போட்டுத் தான் வளர்க்கப்படுகின்றன.
இந்த மருந்துகளின் பாதிப்பு இறைச்சி யில் மட்டுமல்லாமல், முட்டையிலும் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே முட்டை, பால், இறைச்சி போன்ற பொருள் களை நன்கு வேகவைத்து பரிமாறுங்கள்.
No comments:
Post a Comment