மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 24, 2023

மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு

 பத்து ஆண்டுகளுக்குப் பின் நடைமுறைப்படுத்தப் போகும்
மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு இப்பொழுது அவசரம் ஏன்?ஜாதிவாரி கணக்கெடுப்பை திசை திருப்பும் முயற்சி

புதுடில்லி, செப். 24 - டில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவல கத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாங்கள் வரவேற்கிறோம். மகளிர் மசோதாவில் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு கட்டாயம் வழங்க வேண்டும்.

நாடு தழுவிய அளவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப் போது தான் இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் (ஓ.பி.சி.) எவ்வ ளவு பேர் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். 

அமைச்சரவை செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற செயலா ளர்கள் 90 பேரில் 3 அதி காரிகள் மட்டுமே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். பிரதமர் மோடி ஒவ் வொரு நாளும் ஓ.பி.சி. பற்றி பேசுகிறார்.

ஆனால் அவர் ஓ.பி.சி. பிரிவினருக்கு என்ன செய்தார்?

நாட்டில் 5 சதவீத மக்களே எஞ்சிய 95 சத வீத மக்களுக்கு சட் டத்தை உருவாக்குகிறார் கள்.

மகளிருக்கு இட ஒதுக் கீடு வழங்கும் முன்பு மக்கள் தொகை கணக்கெ டுப்பு, தொகுதி மறுவரை யறை செய்ய வேண்டும்.

இதற்கு 10 ஆண்டுக ளாவது ஆகும். சிறப்புக் கூட்ட தொடரின் நோக் கமே மகளிர் இட ஒதுக் கீடு மசோதாதான்.

எனவே இந்த மசோ தாவை உடனே செயல் படுத்துவதில் எந்த சிக்க லும் இல்லை.

இப்போதைய நிலை யில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அரசியலை திசை திருப்பும் செயலா கவே தெரிகிறது. எனவே காங்கிரஸ் மேற்கொண்ட ஜாதிவாரி கணக்கெடுப் பின் புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெ டுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை முறைப் படுத்த வேண்டும்.

மகளிர் இட ஒதுக் கீட்டு மசோதாவில் ஓ.பி.சி. பிரிவினர் பயன் பெற உள் ஒதுக்கீடு அவசி யமானது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment