சென்னை, செப். 26 - 1000 நாட்டுப்படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் கருவிகள் வாங்க ரூ.4.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கால்நடை மற்றும் மீன்வளத்துறை கூடு தல் தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரத்தில் கடந்த ஆக.18ஆம் தேதி நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் 1,000 நாட்டுப் படகு மீனவர்களுக்கு, 40% மானியத்தில் வெளிப் பொருத் தும் மற்றும் உட்பொருத்தும் கருவிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெளியிட்டார்.
அதன்படி, பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு உதவிடும் பொருட்டு 2023-2024ஆம் நிதியாண்டில் மாநில அரசு நிதியின் கீழ், பாரம்பரிய நாட்டுப்படகு மீன வர்களுக்கு 1,000 எண்ணிக்கையிலான 28 குதிரைத் திறனுக்கு குறைவான சக்தியுடைய வெளிப்பொருத்தும் மற்றும் உட்பொருத்தும் கருவிகளை, ஒன்றின் விலை ரூ.1.20 லட்சம் என்ற அடிப்படையில் 40 விழுக்காடு மானி யத்தில் வழங்கிட நிர்வாக ஒப்புதலும் மானியத் தொகை யாக மொத்தம் ரூ.4.80 கோடி நிதி ஒப்பளிப்பும் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment