12.9.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் என்ன என்று ஒன்றிய அமைச்சர்களுக்கே தெரியாது என்கிறார் எழுத்தாளர் ஆகார் படேல்.
👉 மராத்தா ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு தராவிடில், பெரும் போராட்டம் நடத்துவோம் என அகில இந்திய மராத்தா சங்கம் ஷிண்டே அரசுக்கு எச்சரிக்கை.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
👉வரும் தேர்தலில் மோடியை மக்கள் ஆட்சியில் இருந்து வெளியேற்றுவது உறுதி, என லாலு பிரசாத் யாதவ் பேட்டி.
👉கோயில் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். சாகா, ஆயுதப் பயிற்சி நடத்த கேரள உயர்நீதிமன்றம் தடை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைய (டிராய்) தலைவர் பதவியை தனியாருக்கு தாரை வார்க்க மோடி அரசு முடிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉 ஜி-20 மாநாடு முடிந்து விட்டது. நாட்டின் உணவுத் தட்டுப்பாடு, வேலையின்மை பிரச்சினையை தீர்க்க வாருங்கள் என மோடிக்கு கார்கே அழைப்பு.
👉 செப்., 15ஆம் தேதி முதல், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம்1000 ரூபாய் 1 கோடி பெண்களுக்கு, வழங்கப்படும். தொடக்க விழா காஞ்சியில் நடை பெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.
தி இந்து:
👉 ஸனாதனம் இடம், நேரம், சூழல் மற்றும் காரணம் ஆகியவற்றுடன் மாறுகிறது என்கிறார் இசையமைப்பாளர் டி.எம்.கிருஷ்ணா.
👉ஜி-20 மாநாட்டுக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் ரூ.990 கோடி. ஆனால், பாஜக அரசு 4,100 கோடி செலவு செய்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் குற்றச்சாட்டு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment