ஒரு கோடி கோவிந்தா நாமம் எழுதி வந்தால்,
வி.அய்.பி. தரிசனமாம்.
- திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு அறிவிப்பு.
கடவுள்மீதான பக்தியை பரப்ப இப்படி ஒரு மலிவான யுக்தியா?
கடவுளை காப்பாற்ற மனிதர்கள் முயற்சியா?
இல்லாத ஒன்றைக் காப்பாற்ற எவ்வளவு முயற்சி களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது பார்த்தீர்களா?
இதுதான் மதச்சார்பின்மையோ!
ஜி-20 மாநாட்டின் முகப்பில் நடராஜர் சிலையா? பன்மதங்கள் உள்ள நாட்டில், மத நம்பிக்கையற்றவர் களும் வாழும் பன்முகத்தன்மை உள்ள ஒரு நாட்டில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விரோதமாகக் குறிப்பிட்ட இந்து மத கடவுளை ஒரு பன்னாட்டு மாநாட்டு முகப்பில் வைப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தையே கொச்சைப்படுத்துவது ஆகாதா?
பா.ஜ.க. என்றால் பார்ப்பனியம், மதவாதம் என்பது பச்சையாக வெளிப்பட்டு விட்டதே!
No comments:
Post a Comment