கோவை, செப். 13- கோவை மாவட்ட கழக கலந்துரை யாடல் கூட்டம் சுந்தார புரம் அருகில் உள்ள காம ராஜர் நகர் கண்ணப்பன் அரங்கில் 10.9.2023 அன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட தலை வர் ம.சந்திரசேகர் தலை மையில் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட செயலாளர் க.வீரமணி, மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன் ஆகியோர் கருத் துரை வழங்கினார்கள்.
தொடர்ந்து பக மாவட்ட தலைவர் பெ. சின்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் பழ அன்பரசு, கிழக்குப் பகுதி செயலா ளர் இல.கிருஷ்ணமூர்த்தி, வடக்கு பகுதி செயலாளர் கவி கிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் மு. தமிழ்செல்வம், மாவட்ட துணை செயலாளர் திக. காளிமுத்து, வே.தமிழ் முரசு, ஆட்டோ சக்தி, சா.செல்லகுமார், கா. கோபாலகிருட்டினன், மே.பா.ரங்கசாமி, நா.குரு, தொழிலாளர் அணி பொருளாளர் முத்து மாலையப்பன், வி.என்.சி. ராஜசேகர், சி.பி.கருணா ஆனந்தகுமார், ஜுடி நாயுடு நினைவு பெரியார் படிப்பகம்,பெரியார் புத்தக நிலைய பொறுப் பாளர் அ.மு.ராஜா உள் ளிட்டோர் பங்கேற்று தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
கழகத் தோழர்கள் தங்கள் இல்லங்கள்தோ றும் தந்தை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை கிளை கழகம்தோறும் பெரியார் படம் வைத்து மாலை அணிவித்தும், கழகக் கொடியேற்றியும் இனிப்பு வழங்கி மிக சிறப் பாக கொண்டாடுவது எனவும், கோவையில் தந்தை பெரியார் சிலை உள்ள சுந்தராபுரம், குனி யமுத்தூர், சுண்ணாம்பு கால்வாய், புலியகுளம், வெள்ளளூர், உள்ளிட்ட பகுதிகளில் எழுச்சியுடன் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாட கழக தோழர்கள் ஆர்வமுடன் தங்கள் கருத்துகளை எடுத்து கூறினார்கள்
கூட்டத்தில் அண்மை யில் கோவையில் நடை பெற்ற பெரியாரியல் பயிற்சி வகுப்புக்காக உழைத்து கழகத் தோழர்கள், அனை வருக்கும் பாராட்டு தெரி விக்கப்பட்டது
நிறைவாக தெற்கு பகுதி செயலாளர் தெ. குமரேசன் நன்றி கூறினார்.
தொழிலாளர் அணி செயலாளர் வெங்கடா சலம் மாமனார் பரம சிவம் (வயது 82)மறை விற்கும், கோவை காம ராஜ் நகர் கழக தோழர் இருதயராஜ் தாயார் ஆவுடையம்மாள் மறை விற்கு ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும் தெரிவிக்கப் பட்டது.
செப் 17, தந்தை பெரியார் அவர்களின் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை கோவை மாவட்டம் முழுவதும் மிக சிறப்பாக கொண் டாடுவது எனவும், தந்தை பெரியார் சிலை உள்ள சுந்தாரபுரம், குனியமுத் தூர் சுன்னாம்புகால்வாய், புலியகுளம், வெள்ளளூர் உள்ளிட்ட அய்ந்து பகுதி களிலும், மாலை அணி வித்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கி எழுச்சியுடன் சிறப்பாக கொண்டாட முடிவுசெய்தும் கலந்து ரையாடல் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.
No comments:
Post a Comment