அரக்கோணம், செப்.10- 09.09.2023 சனிக்கிழமை ராணிப்பேட்டை மாவட் டம், அரக்கோணம் அம்பேத்கர் பவன் அரங்கத்தில் 122 மாணவர்களுடன் தொடங்கிய பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்று பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் நா.ராமு உரையாற்றினார்.
மாவட்ட தலைவர் சு.லோகநாதன் தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் சொ.ஜீவன் தாஸ், மாவட்ட துணை தலைவர் பொன்.வெங்கடேசன், கழக சொற் பொழிவாளர் சங்கர், மகளிர் அணி பொறுப்பாளர் பிரேமா, அம்பேத்கர் பவன் பொறுப்பாளர் மோகன் பெல்.சின்னத்துரை, மாவட்ட செய லாளர் செ.கோபி, பாவேந்தர் தமிழ் மன்ற பொறுப்பாளர்கள் தமிழ்கனல், பாண்டியன், தமிழ்ச்செல்வன், பேரா சிரியர் வீரமணி ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
திராவிடர் கழக காப்பாளர் பு.எல் லப்பன் தொடக்க உரையாற்றினார்.
திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்தார்.
திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர், பெரியாரியல் பயிற்சி பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக் குமார் ஒருங்கிணைத்து நடத்தினார்.
நெமிலி ஒன்றிய தலைவர் பெரப்பேரி சு.சங்கர், நெமிலி ஒன்றிய மதிமுக செயலாளர் ஆறுமுகம், மாவட்ட மாணவர் கழக தலைவர் லோ.அறிவு மணி, மாவட்ட மாணவர் கழக செய லாளர் அமுதம், செல்வி, அறிவரசி, மணியம்மை, ஆசிரியர் விசுவநாதன், ஆலிப்மேரி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
அரக்கோணம் நகர திராவிட கழக செயலாளர் சு.பெரியார்நேசன் நன்றி கூறினார்.
வகுப்புகளும் தலைப்புகளும்
கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு - ‘பெரியார் தந்தை பெரியார் ஒர் அறிமுகம்‘ என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார்.தொடர்ந்து திராவிடர் கழக துணை பொது செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி - ‘பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்’ என்ற தலைப்பிலும்,
திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்கள் - ‘தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்’ என்ற தலைப்பிலும்,
பகுத்தறிவாள கழக ஊடகப்பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி - ‘சமூக ஊடகங்களில் நமது பங்கு’ என்ற தலைப்பிலும்,
‘தந்தை பெரியாரும் ஜாதி ஒழிப்பும்‘ என்ற தலைப்பில் வழக்குரைஞர் சு.குமாரதேவன் அவர்களும்,
‘இந்து இந்துத்துவா சங்பரிவார் ஆர்எஸ்எஸ்’ என்ற தலைப்பில் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களும்,
‘பார்ப்பன பண்பாட்டு படையெடுப் புகள்’ என்ற தலைப்பில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் வகுப்பு எடுத்தனர்.
திராவிடர் கழகம் மாநில ஒருங் கிணைப்பாளர் ஜெயக்குமார் பயிற்சி பெற்ற ஏற்பாடு செய்த கழகப் பொறுப் பாளர்களின் பயிற்சி பங்கேற்ற மாண வர்களையும் பாராட்டி உரையாற் றினார்.
சிறப்பாக குறிப்பு எடுத்த டிகாரம் சிவனேஷ் , வசந்தகுமார், சரவணகுமார், யோகேஷ் ஆகியோர்களுக்கு புத்த கங்கள் பரிசாக வழங்கி சிறப்பிக்கப் பட்டது.
பர்வீனராஜ், முகுந்தன் ஆகியோர் பயிற்சிப் பட்டறையின் பயன்பாடுகள் குறித்து உரையாற்றினர்.
பங்கேற்ற மாணவர்கள் அனைவ ருக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப் பட்டது.
180 ஆண்களும், 42 பெண்களும், மொத்தம் 122 மாணவர்கள் பங்கேற் றனர்.
கல்லூரி மாணவர்கள் 10, பள்ளி மாணவர்கள் 112 நபர்கள் பங்கேற்றனர்.
2000 ரூபாய்க்கு கழகப் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.
No comments:
Post a Comment