பா.ஜ.க.வில் குழப்பம்! ‘தினமலரே’ கூறுகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 6, 2023

பா.ஜ.க.வில் குழப்பம்! ‘தினமலரே’ கூறுகிறது

மரியாதையே இல்லையே!

‘பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தால், கட்சியின் மேலிட தலைவர்கள் இப்படி உத்தரவு போடுகின்றனரே...’ என, ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியா புலம்புகிறார்.

ராஜஸ்தானில், முதல்வர்அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அடுத்த சில மாதங்களில் இங்கு சட்டசபை தேர்தல்நடக்கவுள்ளதால், தேர்தல் பிரசாரங்கள் முழு வீச்சில் நடக்கின்றன.

பா.ஜ., சார்பில் முன்னாள் முதல்வரான வசுந்தரா ராஜே, தன்னைத் தான் கட்சி மேலிடம் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் என, உறுதியாக நம்பி வந்தார்.

வசுந்தராவுடன், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கட்சியின் மாநில தலைவர்சி.பி.ஜோஷி, மூத்த தலைவர் சதீஷ் பூனியா ஆகியோரும் முதல்வர் வேட் பாளருக்கான போட்டியில் மல்லுக்கட்டினர்.

இவர்களது இந்த நான்கு முனை போட்டி யால், கட்சியின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படுமோ என, பா.ஜ., மேலிட தலைவர்கள் கவலை அடைந்தனர்.

இதையடுத்து, நான்கு பேரையும் தனித் தனியாக டில்லிக்கு அழைத்த பா.ஜ., தலைவர்கள், ‘முதல்வர் பதவி குறித்து நான்கு பேருமே இப் போது மூச்சு விடக் கூடாது. தேர்தல் முடிந்ததும், இந்த விஷயத்தில் நாங்கள் முடிவு எடுப்போம். அதுவரை பிரசார வேலையை மட்டும் பாருங் கள்...’ என, வாய்ப்பூட்டு போட்டு அனுப்பி வைத்து விட்டனர்.

இதனால் நான்கு பேருமே கடும் ஏமாற்றத்தில் இருந்தாலும், இவர்களில் அதிக மன உளைச்சலில் இருப்பது வசுந்தரா தான். ‘முன்னாள் முதல்வர் என்ற மரியாதை கொஞ்சமும் இல்லையே...’ என, கோபத்தில் குமுறுகிறார்.

‘தினமலர்’ - 5.9.2023


No comments:

Post a Comment