திருச்சி, செப். 25- சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருந்தியல் துறை சார்பில்PHARMGREE’23 - Transforming the Future of Healthcare by Innovative Technology பல என்ற தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் 14.09.2023 முதல் 15.09.2023 வரை நடைபெற்றது.
இக் கருத்தரங்கில் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்க வேதியியல் துறை பேராசிரியர் ஜெ.மோனிசா, மூலிகை மருந்தியல் துறை பேராசிரியர் வி. கவிதா, முது நிலை மருந்தியல் மாணவர்கள் இரா. தினேஷ், மா.அருண்பிரசாத் மற்றும் இரா. மகாபிரபு ஆகியோர் கலந்து கொண்டு தமது வாய்மொழி ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப் பித்தனர். இதில் பேராசிரியர் ஜெ. மோனிசா அவர்கள் மருந்தாக்க வேதியியல் தொடர்பான தமது வாய்மொழி ஆராய்ச்சிக் கட்டு ரைக்கு (Oral Presentation) மூன் றாமிடத்தையும் பாராட்டுச் சான் றிதழ் மற்றும் நினைவுப் பரிசினை யும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
சிறப்பிடம் பெற்ற பேராசிரியர் ஜெ. மோனிசா அவர்களை கல்லூ ரியின் நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியா ளர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
23 மருந்தியல் கல்லூரிகள் பங்கு கொண்ட இக்கருத்தரங்கில் 54 வாய்மொழி ஆராய்ச்சிக் கட்டுரை கள் சமர்ப்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment