அமித்ஷா - எடப்பாடி சந்திப்பு பின்னணி என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 25, 2023

அமித்ஷா - எடப்பாடி சந்திப்பு பின்னணி என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருப்பூர், செப். 25- அ.தி.மு.க.வும், பா.ஜ.க. வும் சண்டை போடுவது போல வெளியே நடிக்கிறார்கள்’ அமித்ஷாவை எடப்பாடி பழனிச் சாமி சந்தித்ததன் பின்னணி என்ன என்றும் தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருப்பூரில் தி.மு.க. மேற்கு மண் டல வாக்குச்சாவடி பொறுப்பாளர் கள் பயிற்சி பாசறைக் கூட்டம் நேற்று (24.9.2023) நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கலந்துகொண்டார். 

கூட்டத்தில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொரு ளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் கள் கே.என்.நேரு, க.பொன்முடி, மு.பெ.சாமிநாதன், முத்துசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

 நாற்பதும் நமதே, நாடும் நமதே

வாக்குச்சாவடி பொறுப்பாளர் களான நீங்கள்தான் உங்கள் வாக்குச் சாவடியில் உள்ள வாக்கா ளர்களுக்கு முழுப் பொறுப்பாளர். வாக்குச்சாவடி பொறுப்பாளர் என்றால் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலின் வெற் றிக்கு நீங்கள்தான் பொறுப்பாளர் என்பதை மறந்துவிடாதீர்கள். 

'நாற்பதும் நமதே, நாடும் நமதே' என்று நான் முழங்கி இருக்கிறேன் என்றால் அது உங்கள் மேல் நான் வைத்திருக்கும் அளவு கடந்த நம்பிக்கை காரணமாகத்தான்.

தினமும் ஒரு மணி நேரத்தை கட்சிக்காக ஒதுக்குங்கள்? ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம், உங் களால் ஒதுக்க முடியுமா? ஒதுக் குவீர்களா?

அந்த ஒரு மணி நேரத்தை 'பூத்' வேலைக்காக ஒதுக்குங்கள். அடுத் ததாக, அரசின் திட்டங்களையும் முழுவதும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். யாருக்கு என்ன தேவையோ அதை தெரிந்து கொண்டு ஏற்பாடு செய்து கொடுங் கள்.

ஒவ்வொரு நாளும் பத்து வீடுகளுக்கு சென்று பேசுங்கள். ஒரு மாதத்தில் உங்கள் வாக்குச் சாவடியில் இருக்கும் அத்தனை வீடுகளுக்கும் நீங்கள் சென்று பேசியிருப்பீர்கள்.

சில வீடுகளில் மகிழ்ச்சியாக வரவேற்பார்கள். சில வீடுகளில் அதை எதிர்பார்க்க முடியாது. அதற்காக நாம் விட்டுவிடக்கூடாது. மீண்டும் அடுத்த மாதம் புன்னகை மாறாமல் அவர்களைத் தேடிச் செல்லுங்கள்.

என்னைப் பொறுத்தவரை நம்மை நிராகரிப்பவர்களே இருக்க மாட்டார்கள் என்று நினைக் கிறேன். அனைவருக்கும் பொது வான மக்களாட்சியை நாம் நடத்திக்கொண்டு வருகிறோம்.

ஆனால், ஒன்றியத்தில் ஓர் ஆட்சி இருக்கிறது. அதுவும் இரண்டாவது முறையாக ஆட்சி யில் இருக்கிறது. 3ஆ-வது முறை வரப்போவதில்லை.

வரக்கூடாது. அதுதான் முக்கி யம். பத்து ஆண்டு ஆகப்போகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. சொன்ன தற்கு மாறாக, 'ரிவர்ஸ் கியரில்' போய்க்கொண்டிருக்கிறது. 

பிரதமர் நரேந்திர மோடியிடம் அவருடைய ஆட்சியின் சாதனை என்று சொல்லிக்கொள்வதற்கு எதுவும் இல்லை. அதனால்தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து கணக்கு காட்டப் பார்க்கிறார். இதையாவது சொல்லி வாக்கு கேக்கலாம் என்று நினைக்கிறார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க, தமிழ் நாட்டில் டெபாசிட் வாங்க கூட தகுதியில்லாத கட்சி என்று நம்மை விட அவர்களுக்கே நன்றாக தெரி யும். அதனால்தான் அ.தி.மு.க.வை பயமுறுத்தி அச்சுறுத்தி தன்னு டைய கூட்டணியில் வைத்திருக் கிறார்கள்.

அவர்கள் சண்டை போடுவதாக வெளியில் நடிக்கிறார்கள். உள்ளே நட்பாக இருக்கிறார்கள். எதற்காக இந்த நடிப்பு? அ.தி.மு.க.வை ஆத ரித்தால், அவர்களின் ஊழல்க ளுக்கு பா.ஜ.க.வும் பொறுப்பேற்க வேண்டி வரும். பா.ஜ.க.வை ஆத ரித்தால், பா.ஜ.க.வின் மதவாதத் திற்கு அ.தி.மு.க.வும் துணைபோக வேண்டி வரும்.

அதனால் நடிக்கிறார்கள். இங்கு இவ்வளவு சண்டை நடந்த போது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்க்க எடப்பாடி பழனிசாமி சென்றாரே... என்ன காரணம்? ஊழல் வழக்கு உச்சநீதி மன்றத்திற்கு வருகிறது.

காப்பாற்றுங்கள் என்று கேட்க சென்றாரா? கோடநாடு வழக்கில் இருந்து நழுவிட சென்றாரா? எதற் காக இந்த சந்திப்பு?

ஒன்றிய பா.ஜ.க. அரசு மூலமாக, தமிழ்நாட்டுக்கு அ.தி.மு.க கொண்டு வந்த நன்மை என்ன? 

எதுவும் இல்லை. பா.ஜ.க.வின் பாசிச திட்டங்கள் எல்லாவற் றுக்கும் ஆட்சி யில் இருந்தபோது தலையாட்டி விட்டு, இன்றைக்கு பா.ஜ.க.வை எதிர்க்கின்ற மாதிரி மக்களிடம் காட்டிக்கொண்டு, மறைமுகமாக பா.ஜ.க தலை வர்களை சந்தித்துக் கொண்டு இருக்கும் அ.தி.மு.க.வுக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் படு தோல்வியை பரிசாகத்தர வேண்டும்.

வாக்குச்சாவடி பொறுப்பாளர் களின் கடமை இதுவரை மக்களை ஏமாற்றிய பா.ஜ.க., அ.தி.மு.க. இந்த தேர்தலில் மக்களால் தோற் கடிக்கப்பட இருக்கிறது.

மக்களின் இந்த கோபத்தை நமக்கான வாக்கு களாக மாற்ற வேண்டிய கடமை வாக்குச்சாவடி பொறுப்பாளர் களான உங்களுக்கு இருக்கிறது. 

கட்சிக்காக உழையுங்கள். மக்க ளுக்காக உழையுங்கள். அதற்கான உரிய பலன் உங்களைத் தேடி வரும்.

இயக்கத்திற்காக இரவு பகல் பாராமல் உழைத்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. அவர் களை கட்சி எப்போதும் கை விடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment