களிமண் பிள்ளையார் சிலைகளை வீட்டிலேயே கரைக்க அறிவுரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 20, 2023

களிமண் பிள்ளையார் சிலைகளை வீட்டிலேயே கரைக்க அறிவுரை!

சென்னை, செப். 20- பிள்ளையார்  சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறை களை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:

இயற்கையான களிமண், காகிதக் கூழ், இயற்கை வண் ணங்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே, நீர் நிலைகளில் கரைக்க வேண் டும்.

சிலைகளை கரைக் கும் முன், சிலைகளை அலங்கரித்த துணிகள், பூமாலைகள், தோரணங் கள், இலைகள், செயற்கை ஆபரணங்கள் போன்ற வற்றை, 24 மணி நேரத் திற்குள், உள்ளாட்சி அமைப்புகள் அகற்ற வேண்டும்.

அவற்றை, திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி கையாள வேண்டும்.

சிலைகளில் இருந்து அகற்றப்பட்ட பொருள் களை, நீர் நிலைகளின் கரையோரம் கொட்டி, தீயிட்டு எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வீடுகளில் பூஜை செய் யப்பட்ட களிமண் சிலை களை நீர் நிலைகளில் கரைக்காமல், கூடுமான வரை வீட்டில் வாளியில் நீர் நிரப்பி, அதில் சிலையை மூழ்க வைத்து கரைக்கவும். தெளிந்த நீரை வடிகாலில் வெளி யேற்றலாம்.

சேற்றை உலர வைத்து, தோட்டத்தில் மண்ணாக பயன்படுத் தலாம். இவ்வாறு வாரி யம் தெரிவித்துள்ளது.  

மும்பையில் கடந்த 20 ஆண்டுகளாக அதிக அளவு சிலைகள் கடற் கரையில் கரைக்கப்படு வதால் மும்பை கடற் கரைப் பகுதிகளில் மீன் கள் வரத்து சுத்தமாகவே நின்றுபோனது, அது மட்டுமல்லாமல் கடற் கரையில் இயற்கையா கவே உருவாகும் பவளங் கள் மற்றும் கடற்பாசிகள் மகாராட்டிரா மற்றும் குஜராத் கடற்கரைகளில் முற்றிலும் வளர்வது நின்றுபோனது.

இவைகள் மீன்களின் நர்சரி என்று அழைப் பார்கள். அதாவது இங்கு தான் மீன்கள் முட்டை யிட்டு குஞ்சுபொரிக்கும்.

அந்தக் குஞ்சுகள் பாதுகாப்பாக வளர் வதற்கு கடற்பாசிகள் மற்றும் பவளப் பாறைத் தொகுப்புகள் முக்கிய காரணியாக அமையும். 

ஆனால், பிள்ளை யார் சிலை கரைப்பு என்ற பெயரில் ரசாயன சிலைகள் 20 ஆண்டுக ளாக தொடர்ந்து கரைக் கப்பட்டதால் மும்பை குஜராத் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அந்த நிலை தமிழ்நாட்டிலும் வரக்கூடாது என்பதில் தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் முனந்து செயல்பட்டு நிபந்தனை களை விதித்துள்ளது.

No comments:

Post a Comment