சென்னை, செப்.29 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக புகார் அளித்தவரிடம் விசாரிக் காமல் புகார் எப்படி முடித்து வைக்கப்பட்டது என்பதற்காக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உயர்நீதிமன் றம் உத்தர விட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018இல் போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல் லப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசார ணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய் வுப் பிரிவு அறிக்கையின் அடிப் படை யிலும், தமிழ்நாடு அரசின் அறிக் கையின் அடிப்படையிலும் வழக்கை முடித்து உத்தரவிட் டது.
இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்குரைஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா அடங்கிய அமர்வு முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தேசிய மனித உரிமை ஆணையத் தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை தமிழ்நாடு அரசுக்கு கிடைத்துள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வழக்கு நேற்று (28.9.2023) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசா ரணைப் பிரிவு அளித்த அறிக் கையின் நகல் தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.
அப்போது மனுதாரர் ஹென்றி திபேன், வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தனது புகார் மனு குறித்து எந்த ஒரு பதிவும் இல்லை என்றார்.
வழக்கை விசாரித்த நீதி பதிகள், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசா ரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் ஹென்றி திபேன் அளித்த புகார் குறித்த பதிவு இடம்பெறாதது ஏன்?. அவர் தரப்பு வாதத்தை கேட்காதது ஏன்? என்று கேள்வி எழுப் பினர்.
பின்னர் இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
No comments:
Post a Comment