சென்னை,செப்.26- தமிழ்நாடு அரசின் கல் லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப் படிப்பில் (எம்.எட்.,) மாணாக்கர் சேர்க்கை 25.9.2023 அன்று தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்வியியல் கல்லூ ரிகளில் முதுநிலை கல் வியியல் பட்டப்படிப்பு (எம்.எட்.,) முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக் கான (2023-2024) விண் ணப்பங்களை <http://www.tngasaedu.in> என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்யலாம்.
விண்ணப்பம் பதிவு செய்ய ஒவ்வொரு கல் லூரிக்கும், விண்ணப்பக் கட்டணம் ரூ.58 மற்றும் விண்ணப்ப பதிவுக் கட்டணம் ரூ.2/. மொத்தம் ரூ.60/. (ரூபாய் .அறுபது மட்டும்) செலுத்தப் பட வேண்டும். SC/SCA/ ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவுக் கட்டணம் ரூ.2/- (ரூபாய் இரண்டு மட்டும்) செலுத் தினால் போதுமானது.
மாணாக்கர்கள் விண் ணப்பிக்கும் போது தங்க ளது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் www.tngasa.in <http://www.tngasaedu.in> என்ற இணைய தள முகவரியில் தெரிவிக் கப்படும்.
விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் :
விண்ணப்பக் கட்ட ணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப் பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இய லாத மாணாக்கர்கள் கல் லூரி சேர்க்கை உதவி மய்யங்களில் “ The Director, Directorate of Collegiate Education, Chennai என்ற பெயரில் 25.09.2023 அன்று அல் லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரை வோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.
மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற் குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள் ளலாம்.
இணையதள வாயி லாக விண்ணப்பப் பதிவு துவங்கும் நாள்: 25.09.2023
இணையதள வாயி லாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்: -30.09.2023
தொடர்பு எண் : 93634 - 62070, 93634 - 62007, 93634 - 62042, 93634 - 62024.
இவ்வாறு தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி இயக்ககம், கல்லூரிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment