கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
23.9.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நாட்டின் பிற பிரச்சினைகளில் இருந்து திசை திருப்ப மோடி அரசு பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது, ராகுல் குற்றச்சாட்டு.
* மக்களவையில் பி.எஸ்.பி. எம்.பி. டேனிஷ் அலியை அநாகரிகமாக பேசிய பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி மீது உரிமை மீறல் நடவடிக்கை கோரி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அம்பேத்கர் குறித்து அவதூறு பேசிய வி.எச்.பி. தலைவர் மணியனுக்கு பிணை வழங்க, காவல்துறை நீதிமன்றத்தில் எதிர்ப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கேரள மாநிலம் பாலக்காட்டில் அகில உலக பார்ப்பனர்கள் மாநாட்டில் மகாதேவன், அய்அய்எம் பெங்க ளூர், கே ராமசுப்ரமணியன், அய்அய்டி மும்பை, மெட்ராஸ் சமஸ்கிருதக் கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் கே வி சேஷாத்ரிநாத் சாஸ்திரிகள் மற்றும் வேத அறிஞரும் மேலாண்மை குருவுமான கே.வி.சர்மா ஆகி யோர் கலந்து கொள்கிறார்கள்.
தி இந்து:
* ஆட்சிக்கு வந்தால் புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ஓபிசி துணை ஒதுக்கீட்டில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வர முடியாததற்கு நூறு சதவீதம் வருத்தம் தெரிவிப்பதாக ராகுல் பேச்சு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* இந்தியாவில் அடிப்படை உரிமைகள், குறிப்பாக மதம் மற்றும் பிற சிறுபான்மையினரின் "நிலையான" மற்றும் "எச்சரிக்கை" பாதிப்பு உள்ளது என்று அய்க்கிய நாடு களின் சிறுபான்மை விவகாரங்களுக்கான சிறப்பு தூதர் அறிக்கை.
* ஒன்றிய மருத்துவ ஆலோசனைக் குழுவின் (எம்.சி.சி) மூன்று சுற்று எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங்கிற்கு பிறகும், தமிழ்நாட்டில் உள்ள 483 இடங்கள் உட்பட குறைந்தது 1,641 எம்.பி.பி.எஸ். இடங்கள் நாடு முழுவதும் காலியாக உள்ளன.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment