1.9.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉 வரும் 18 முதல் 22ஆம் தேதி வரை 5 நாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்ற ஒன்றிய அரசின் திடீர் அறிவிப்பால் பரபரப்பு
👉 அதானி குழுமத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் ரகசியமாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக இரண்டு பன்னாட்டு முக்கிய பத்திரிகைகள் கட்டுரை வெளியிட்ட நிலையில், அவை யாருடைய பணம், யார் ஈடுபட்டு உள்ளார்கள் என ராகுல் காந்தி கேள்வி.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
👉 தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவர் பதவிக்கு மேனாள் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு பெயரை ஆளுநருக்கு மீண்டும் தமிழ்நாடு அரசு அனுப்பியது.
👉 மும்பையில் நடைபெறும் "இந்தியா" கூட்டணியின் 3ஆவது கூட்டத்தில் 28 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். பாஜகவை வீழ்த்த குறைந்தபட்ச பொது திட்டம் குறித்து ஆலோசனை.
தி இந்து:
👉சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் நீதிபதிகள் ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
தி டெலிகிராப்:
👉 அதானிக்கு கிளீன் சிட் கொடுத்த செபியின் மேனாள் அதிகாரி, இன்று அதானி குழுமத்தின் என்டிடிவி யின் இயக்குநராக இருக்கிறார் என ராகுல் குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
👉நாக்பூர் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ. வரலாற்றுப் பாடத்திட்டத்தில் "பாரதிய ஜனதா கட்சி, ஜன சங்கம் ஆகிய கட்சிகள் அறிமுகம். முந்தைய பாடத்திட்டத்தில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, திமுக குறித்த பாடங்கள் நீக்கம்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment