1929ஆம் ஆண்டிலேயே, பெண்களுக்கான உரிமை உண்டு என்று
மாநாடு கூட்டி தீர்மானம் நிறைவேற்றியவர் தந்தை பெரியார்
இப்பொழுது இந்த மசோதாவை நிறைவேற்ற முன்வராமல்
காலம் தாழ்த்துவது ஏன்? - தேர்தல் அரசியல் தான் இதன் பின்னணி!
புதுடில்லி, செப். 20- மகளிர் மசோ தாவை பாஜ., அரசியல் ஆக்குகி றது எனவும், எந்த நிபந்தனை களும் இல்லாமல் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடன டியாக அமல்படுத்த வேண்டும் எனவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் விவாதத்தின் போது, இன்று (20.9.2023) மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பி னர் கனிமொழி பேசியதாவது:
பெண்களுக்கு நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் வாக்குரிமை அளிக்கப்பட்டது. மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்த்திருத்தத் தின் மூலம் மதராஸ் மாநிலத்தில் நடந்த முதல் தேர்தலில் பெண் களுக்கும் வாக்குரிமை அளிக்கப் பட்டது
இந்தியாவிலேயே முதல் முறையாக 10.05.1921ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி அதே ஆண்டிலேயே தமிழ் நாட்டு பெண்களுக்கு வாக்கு ரிமை அளித்தது நீதிக்கட்சி என்ற ஜஸ்டிஸ் பார்ட்டி.நாட்டில் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் முத்துலட் சுமி ரெட்டி தேர்வு செய்யப்பட் டது 1927இல் தமிழ்நாடு சட் டப்பேரவையில்தான். அதன் பலன் தமிழ்நாட்டில் தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம் நிறை வேற்றப்பட்டு தேவதாசி என் னும் நடைமுறை நீக்கப்பட்டது
கடந்த 100 ஆண்டுகளாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படவில்லை. 1929-ஆம் ஆண்டு தந்தை பெரியார் செங்கல்பட்டு முதல் சுயமரி யாதை மாநாட்டில் பெண்க ளுக்கு கல்வி, அரசியல் மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். 1996இல் திமுக அரசு ஆதரவுடன் ஒன்றி யத்தில் மகளிர் மசோதா கொண்டுவரப்பட்டது. தேவக வுடா பிரதமராக இருந்தபோ தும், வாஜ்பாயி பிரதமராக இருந்த போதும் இந்த மசோ தாக்கள் கொண்டு வரப்பட் டன. 2010இல் அய்க்கிய முற் போக்கு கூட்டணி அரசு மாநிலங்களவையில் இதனை நிறைவேற்றியது. 2010இல் மாநிலங்களவையில் இந்த மசோதா குறித்துப் பேசினேன். தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த மக்கள வையில் அதே மசோதா குறித் துப் பேசி வருகிறேன். 2017ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் இந்த மசோதாவை நிறைவேற் றக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார்கள். இதற்காக திமுக டில்லியில் பேரணி நடத்தியுள் ளது. பாஜ., தேர்தல் வாக்குறு தியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இடம் பெற்று இருந்தது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
ஆண்களை சார்ந்திருக்கும் நிலை மாறினால் தான் பெண் கள் விடுதலை சாத்தியமாகும். 13 ஆண்டுகளாக மகளிர் மசோ தாவை நிறைவேற்ற முடியாத சூழல் இருந்தது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பாரதீய ஜனதா கட்சி ரகசியமாக தயாரித் தது ஏன்?. எந்த நிபந்தனைகளும் இல்லாமல் உடனடியாக அமல் படுத்த வேண்டும். தொகுதி வரையறை பின்னரே மகளிர் மசோதா என்பது ஏற்று கொள்ள முடியாது.
'மகளிர் இடஒதுக்கீடு மசோ தாவையும் பாஜக அரசியலுக்குப் பயன்படுத்துகிறது. மகளிர் மசோதாவை தாக்கல் செய்வதில் ஏன் இவ்வளவு தாமதம்? மேலும் இது ரகசியமாக கொண்டுவரப் பட்டுள்ளது. எந்த அரசியல் கட்சிகளுடனும் இதுகுறித்து ஆலோசிக்கவில்லை. எதற்காக சிறப்புக் கூட்டத்தொடர் என்று கூறவில்லை, அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் இந்த மசோதா குறித்து பேசவில்லை, எந்த அர சியல் கட்சித் தலைவர்களுக்கும் தெரிவிக்கவில்லை.
ஒவ்வொரு முறையும் இந்த மசோதாவை கொண்டுவரும் போது அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்று கூறிவருகி றோம். ஆனால் இந்த அரசு என்ன மாதிரியான ஒரு மித்த கருத்தை உருவாக்கினீர்கள் என் பதை நான் இப்போது அறிய விழைகிறேன். இந்த மசோதா மிகவும் ரகசியமாக கொண்டு வரப்பட்டது. இந்த கூட்டத் தொடர் எதற்காக கூட்டப் பட்டது என்பது கூட எங்களுக்கு தெரியாது. 1996ஆம்ஆண்டு முதல் இந்த மசோதா குறித்து பேசி வருகிறோம். 10 ஆண்டு களுக்கு முன்பு நான் பேசினேன், இப்போதும் பேசி வரும் நிலையே உள்ளது.
பெண்கள் தைரியமானவர் கள், ஏன் சுதந்திர போராட் டத்திலும், போர்களிலும் பெண் கள் கலந்து கொண்டு பார்த்த தில்லையா? அரசியலில் தைரிய மான பெண்ணாக இந்திரா காந்தி இருந்ததில்லையா? (அப் போது ஜெயலலிதா என உறுப் பினர்கள் சிலர் கூச்சலிட்டனர். அதற்கு கனிமொழி, ஜெயலலி தாவும் தைரியமான பெண் தலைவர் என்பதை ஒப்புக் கொள் வதில் எனக்கு எந்த தயக்க மும் இல்லை, அவர் மட்டுமில்லை மம்தா, சுஷ்மா ஸ்வராஜ், சோனியா காந்தி உள்ளிட் டோரும் தைரிய மான பெண்கள்தான் என்றார்).
இந்தத் தேர்தலுக்காக இந்த மசோதாவைக் கொண்டு வந்த தாக தெரியவில்லை. ஆனால் தேர்தலுக்கான அறிவிப்பு என்றே கருதப்படுகிறது. "மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்தோம். இவ்வளவு பெரிய விஷயத்தை பெண்களுக் காக நாங்கள் செய்துள்ளோம்" என வாக்கு வங்கிக்காக நீங்கள் இதைக் கொண்டு வந்திருக் கிறீர் கள் என்று தான் தோன்றுகிறது என்று பேசினார்.
No comments:
Post a Comment