‘நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முடிவடைந்த நிலை யில் நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகளான வேலைவாய்ப் பின்மை, அத்தியாவசிய பொருள் களின் விலை உயர்வு, அதானி குழும முறைகேடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல் ஆகிய வற்றிலிருந்து மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகளை மோடி அரசாங்கம் மேற்கொள்ள முயல்கிறது.
ஆனால், சமீபத்திய அறிக்கை களில் நாட்டின் பொருளாதார நிலை புள்ளிவிவரமாகக் குறிப் பிடப்பட்டுள்ளது. அதை அரசால் மறைக்க இயலாது’ எனப் பல்வேறு அறிக்கைகளைச் சுட்டிக்காட்டி ஜெய்ராம் ரமேஷ் 24.9.2023 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அதில், ‘கரோனா பெருந் தொற்றுக்கு முன்னதாக பிப்ரவரி 2020-இல் நாட்டின் மொத்த உழைப்பாளர்களின் பங்கேற்பு 43 சதவீதமாக இருந்தது. இது நிக ழாண்டில் 40 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. 2023-ஆம் ஆண்டில் இந்தியாவின் குடும்பங் களின் மொத்த சேமிப்பானது ரூ.13.77 லட்சம் கோடியாக குறைந் துள்ளது.
இது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 5.1 சதவீதமாகும். கடந்தாண்டில் 7.2 சதவீதமாக இருந்தது குறிப் பிடத்தக்கது.
இதேபோல் தங்கம் மற்றும் தனிநபர் கடன் பெறுவோரின் எண்ணிக்கை முறையே 23 சதவீதம் மற்றும் 29 சதவீதமாக உயர்ந்துள் ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7 சதவீதமாக இருந்த அந்நிய நேரடி முதலீடு தற்போது 1.5 சத வீதமாக குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் செப்டம்பர் மாத அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது.
அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழத் தின் அறிக்கையின்படி 2021-2022ஆம் ஆண்டு நிலவரப்படி நாட்டில் 25 வயதுக்குட்பட்டோ ரின் வேலைவாய்ப்பின்மை 42 சதவீதமாக உள்ளது. கரோனா பெருந்தொற்றுக்கு முன்னதாக சேமித்த பணத்தில் தற்போது 85 சதவீதத்தை மட்டுமே பெண்களால் மீட்டெடுக்க முடிந்துள்ளது.
இதேபோல் மார்சிலஸ் முத லீட்டு நிறுவனத்தின் அறிக்கையில், இந்தியாவில் பல்வேறு தொழில் கள் மூலம் கிடைக்கிற 80 சதவீத லாபம் 20 பெருநிறுவனங்களை மட்டுமே சென்றடைவதாகத் தெரி வித்துள்ளது.
சிறு தொழில்முனைவோரில் 75 சதவீதம் பேர் இழப்பையே சந்தித்து வருவதாக அனைத்திந்திய தொழில் வர்த்தகர்கள் சங்கம் நடத்திய அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
கடந்த மாதம் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்தது. தற்போது அத்தியாவசியப் பொருள்களான பருப்பின் விலை நிகழாண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 45 சதவீதம் உயர்ந் துள்ளது. இதன்மூலம் ஒட்டு மொத்த பருப்பு வகைகளுக்கான பணவீக்கம் 13.4 சதவீதமாக உயர்ந் துள்ளது. இதேபோல் கோதுமை மாவு 20 சதவீதம், சர்க்கரை 5 சத வீதம் எனப் பல்வேறு பொருள் களின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளன.
இவ்வாறு அனைத்துத் துறை களிலும் விலையேற்றம், வணிகம் பாதிப்பு எனப் பொருளாதாரத்தை முறையாக நிர்வகிக்காததால் பொதுமக்கள், இளைஞர்கள், சிறு தொழில்முனைவோர் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment