முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த பெரியார்முரசு (இயற்பெயர் ஆறுமுகம்) தனது 93ஆம் வயதில் மறைவுற்ற செய்தி அறிந்து பெரிதும் வருந் துகிறோம்.
நடக்க முடியாத உடல் நிலையிலும் தள்ளாடித் தள்ளாடி இயக்க நிகழ்ச்சி களில் எல்லாம் பங்கு கொள்ளத் தயங்காதவர் - தவறாதவர்!
ஒரே கொள்கை, ஒரே தலைமை, ஒரே கொடியின்கீழ் கட்டுப்பாடு காத்துக் கடமையாற்றிய பெரியார்முரசு அவர்களின் இழப்பு அவர்தம் குடும் பத்துக்கு மட்டுமல்ல, கழகத்திற்கும் இழப்பேயாகும்.
அவர் மறைவால் துயருறும் குடும்பத்தாருக்கும் இயக்கத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள் கிறோம்.
ஆசிரியர் கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
குறிப்பு: புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலை வர் மானமிகு சிவ. வீரமணி அவர்கள் காரைக் காலில் நடைபெறும் இறுதி நிகழ்வில் பங்கேற்று கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்துவார்.
No comments:
Post a Comment