பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையிலுள்ள பல்வேறு பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், நீச்சல் குளங்கள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் பல்வேறு இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் டெங்கு கொசு எந்த வகையில் பரவுகிறது என்பதை விளக்கி, துண்டறிக்கை வழங்கி எந்ததெந்தப் பொருள்களில் இருந்து பரவுகிறது என விளக்க முறையை மக்களிடத்தில் தெளிவுபடுத்திக் கொண்டுள்ளது. மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் ஒவ்வொரு வார்டுகளிலும் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு மேற்கொள்ளும் பணியைத் துரிதப்படுத்தியுள்ளனர்.
திறந்த நீர்த்தொட்டி, தேங்காய் ஓடுகள், குளிர் சாதனப் பெட்டி, பயன்படுத்தப்படாத டயர், திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள வாளி, ஆட்டுக்கல் போன்ற பொருள்களில் தேங்கக்கூடிய நீரிலிருந்து கொசுக்கள் உருவாகிறது. டெங்கு நோயின் அறிகுறிகள்: காய்ச்சல், மூட்டு மற்றும் தசைகளில் கடுமையான வலி, தோளில் தடுப்புகள், தலைவலி போன்றவையாகும். தகவல் மற்றும் உதவிக்கு: 1913.
No comments:
Post a Comment