மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்றுக! மக்களவையில் சோனியா காந்தி வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 21, 2023

மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்றுக! மக்களவையில் சோனியா காந்தி வலியுறுத்தல்

புதுடில்லி, செப். 21  ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சோனியா காந்தி முழு ஆதரவு தருவதாக அறிவித் துள்ளார்.மக் களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந் நிலையில், ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் அர் ஜுன் ராம் மேக்வால் 19.9.2023 அன்று மக்களவையில் மக ளிர் இடஒதுக்கீடு மசோ தாவை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து அவை யில் விவாதம் நடைபெற் றது.இந்த மசோதா மீது தொடர்ந்து நேற்றும் விவா தம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு சோனியா காந்தி பேசிய தாவது:

மகளிர் இடஒதுக்கீடு மசோதாஎன்பது மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கனவு. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் சார்பில் நான் ஆதரிக்கி றேன். நாட்டின் வளர்ச் சிக்கு பெண்களின் பங்க ளிப்பு என்பது மிகவும் முக் கியமானது. பல்வேறு துறை களில் அவர்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

மசோதா நிறைவேற் றப்பட்டு தாமதப்படுத் தாமல் விரைந்து அமலுக்கு கொண்டு வர வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண் களுக்கு உள் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். இதே போல் ஓபிசி உள் ஒதுக்கீடும் தேவை.

இந்த மசோதா நிறை வேறினால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். அதே நேரத்தில் நான் ஒரு கேள்வி கேட்க விரும்பு கிறேன். இந்த மசோதா வுக்காக 13 ஆண்டுகள் பெண்கள் பொறுமையுடன் காத்திருந்தனர். 

ஆனால் இப்போது, இந்த மசோதா வுக்காக மேலும் சில ஆண் டுகள் காத்திருக்க வேண்டும் என்று பெண்களுக்குச் சொல்லப்படு கிறது. இன்னும் காத்திருப்பு ஏன்? இன்னும் எத்தனை ஆண் டுகள் காத்திருக்கவேண்டும்? 2, 3, 6 அல்லது 8ஆண்டுகள்? இன்னும் எத்தனை காலம் தான் காத்திருப்பது? இந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்றி அமல்படுத்த வேண்டும்.

இந்தியாவில் பெண்கள் தங்கள் சொந்த லாபத்தைப் பற்றி நினைப்பதே இல்லை. அனைவருக்கும் நன்மை செய்யும் ஒரு நதியைப் போல அவர்கள் உழைத்துக் கொண்டே இருந்தனர்.ஒரு பெண்ணின் பொறுமையை புரிந்து கொள்ள முடியாது. பெண்கள்தான் நம்மை புத்திசாலியாகவும் க டின உழைப்பாளியாகவும் மாற்று கின்றனர். எனவே, எங்கள் கோரிக்கை எல்லாம், இந்த மசோதா உடனடியாக நிறைவேற் றப்பட வேண்டும் என்பது தான். 

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

No comments:

Post a Comment