உள்ளிக்கோட்டை, செப். 9- மேலத்திருப் பலாக்குடி பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி .வை.நடேசன்.அவர் களின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா. வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா திராவிடர் கழகத் தெருமுனைக் கூட்டம் 30.8.2013 புதன்கிழமை மாலை 6 மணி அளவில் உள் ளிக்கோட்டை கடைத்தெருவில் சிறப்புடன் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கழக மாவட்ட துணை தலைவர் ந. இன்பக்கடல் வரவேற்புரையாற்றினார்.
மேல திருப்பலாக்குடி மா. கோவிந்தராஜ் தலைமை வகித் தார். மாவட்ட தலைவர் ஆர்.பி. எஸ்.சித்தார்த்தன், திராவிட முன்னேற்றக் கழக மேற்கு ஒன்றி யச் செயலாளர் டி.எஸ்.டி. முத்துவேல், மாவட்ட கழகச் செயலாளர் கோ.கணேசன் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வை.கவுதமன், மன்னை நகரச் செயலாளர் மு.இராம தாசு, ஒன்றியத்தலைவர் மு.தமிழ்ச்செல்வன், மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழ கன், திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் ஊராட்சி மன் றத்தலைவர் மேலத்திருப்பலாக் குடி கா.சந்தானம், திராவிட முன்னேற்ற கழக ஊராட்சி மன்றத்தலைவர் திருப்பலாக்குடி பி.டி.ஆர்.ராஜேந்திரன், மேலத் திரு பாலக்குடி திமுக செயலாளர் உள்ளிக்கோட்டை ஆர்.சேரன், திமுக கிளை பொறுப்பாளர் உள்ளிக்கோட்டை ஏ.மோகன், மாவட்டத் துணை செயலாளர் வீ.புட்பநாதன், பகுத்தறிவு ஆசிரி யரணிமண்டல அமைப்பாளர் சி.ரமேஷ் பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்டத் தலைவர் த.வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் சிறப்புரை யாற்றினார். இக்கூட்டத்திற்கு சிபிஅய் விவசாய தொழிலாள ரணி மன்னை ஒன்றிய செயலா ளர் என்.மகேந்திரன், தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் முத்து.ராஜேந்திரன், மேலவா சல் கோ.திரிசங்கு, கருவாக்குறிச்சி பா.கோபால், மகதை எம்.எஸ்.சேகர், மன்னை ஒன்றிய இளைஞரணித் தலைவர் மு.சந் திரபோஸ், மேலவாசல் அ. குணசேகரன், நல்லிக்கோட்டை என்.நல்லதம்பி, மன்னை நகர கழக இளைஞரணி தலைவர் மா.மணிகண்டன், திராவிட முன்னேற்றக் கழக மாவட்டப் பிரதிநிதி கயல்விழி பொய்யா மொழி, தஞ்சை மாவட்ட இணை செயலாளர் தீ.வா.ஞான சிகாமணி, மன்னை.சிவா வணங் காமுடி, மாவட்ட இளைஞரணி செயலாளர் க.இளங்கோவன், ஒன்றிய இளைஞரணி செயலா ளர் கவிஞர் கோ.செல்வம் மேலத்திருப்பலாக்குடி பகுத்தறி வாளர் கழக தோழர் என்.இந்திர சித்து மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பகுத்தறிவு ஆசிரி யரணி நகர அமைப்பாளர் மேல திருப்பலாக் குடி ஜே.அருளரசன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment