சென்னை, செப். 26 - பாஜக கூட்டணி மற்றும் பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகு வதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இதையடுத்து, அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண் டாடினர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து கடந்த 2019 மக் களவை தேர்தலை அதிமுக சந்தித்தது. 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தது. வரும் 2024 மக் களவை தேர்தலிலும் இந்த கூட் டணி நீடிக்கும் என்றே இரு தரப்பு தலைவர்களும் கூறி வந்தனர்.
சமீபத்தில் டில்லியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்திலும், அ.தி.மு.க.வை பிரதான கட்சி யாக அங்கீகரித்து பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு முக்கியத் துவம் கொடுத்து தனது அருகில் பிரதமர் நரேந்திர மோடி அமர வைத்தார்.
அந்த அளவுக்கு தேசிய அளவில் அதிமுகவுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுத்திருந்தது. இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி பாஜக அழைப்பை ஏற்று டில்லி சென்ற பழனிசாமி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மக்க ளவை தேர்தல் தொடர்பாக ஆலோசித்த பின்னர், அ.தி.மு.க.வின் கூட்டணி நிலைப்பாடு மாறத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, அண்ணா குறித்து தமிழ்நாடு பாஜக தலை வர் அண்ணாமலை விமர்சித்தது விவாதப் பொருளாக மாறியது. அதற்கு அதிமுக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்ணா குறித்து தான் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை என்று அண்ணாமலை திட்ட வட்டமாக கூறிய நிலையில், ‘‘பாஜகவுடன் கூட்டணி இல்லை.
தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்’’ என்று அதிமுக மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். இத னால் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் பரபரப்பு நிலவியது. இதற்கிடையே, அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கே.பி.முனு சாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்க மணி, நத்தம் விஸ்வநாதன், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் ஆகியோர் கடந்த 22ஆ-ம் தேதி டில்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, தமிழ் நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதா கவும், அதை நட்டா ஏற்க மறுத் ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சி யின் பொதுச் செயலாளர் பழனி சாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இதில், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக அனைவரிடமும் கருத்து கேட் கப்பட்டது. ஒவ்வொருவராக தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அப்போது, ‘‘பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக வேண்டும் என்றுதான் தொண்டர்கள், பொதுமக்கள் விரும்புகின்றனர்.
இந்த முடிவை கடந்த 2021ஆம் ஆண்டே எடுத் திருந்தால், தொடர்ந்து 3ஆ-வது முறையாக அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கும்’’ என்று நிர்வாகிகள் பலர் நேரடியாக பேசியுள் ளனர். கூட்டத்துக்கு பிறகு, செய்தி யாளர்களிடம் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறியதாவது:
தேசிய ஜனநாயக கூட் டணியில் உள்ள பாஜக மாநில தலைமை, கடந்த ஓராண்டாக திட்டமிட்டே, வேண்டு மென்றே, உள்நோக்கத்தோடு, அதிமுக மீதும், அறிஞர் அண்ணா, மேனாள் முதலமைச்சர் ஜெயலி லதா ஆகியோரை அவதூறாக பேசியும், எங்கள் கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.
கடந்த ஆக.20ஆ-ம் தேதி மதுரையில் நடந்த அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப் படுத்தியும், 2 கோடிக்கும் மேற் பட்ட தொண்டர்களை வழி நடத்தி வரும் பொதுச் செயலா ளர் பழனிசாமி பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது.
இது தொண்டர்கள், நிர்வா கிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கட்சித் தலைமை அலுவலகத்தில் தற்போது நடந்து முடிந்த ஆலோசனைக் கூட்டத் தில்,‘2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணம், விருப்பம், உணர்வுகளுக்கு மதிப் பளித்து, அதிமுக இன்று முதல், பாஜக கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது’ என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக தலைமையில் மற்ற கூட்டணிக் கட்சிகள் இணைந்து 2024 மக்களவை தேர்தலை சந்திக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தொண்டர்கள் கொண்டாட் டம்: பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியானதும், தலைமை அலு வலகம் முன்பு அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண் டாட்டத்தில் ஈடுபட்ட னர். நல்ல முடிவை எடுத்திருப்பதாக முழக்க மிட்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலு மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment