திருமண பந்தம் அல் லாது, திருமண முறிவு ஆகியவற்றால் பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் சொத்தில் மட்டும் உரிமை உள்ளதா அல்லது பெற்றோரின் பூர்வீக சொத்தில் உரிமை உள்ளதா என்ற பல்வேறு சட்டக் கேள்விகள் அடங்கிய வழக்கை 2011-இல் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, கூடு தல் அமர்வுக்கு பரிந்து ரைத்தது. இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பார்தி வாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பை வெளியிட்டது.
அதில், ‘செல்லாத அல்லது உறவு முறிந்த திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளாக இருந்தாலும் அவர்க ளுக்கு சட்டப்பூர்வ அங்கீ காரம் உள்ளது. திருமண உறவு முறிந்திருந்தாலும் அந்தக் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளதால் அவர்களுக்கு சொத்தில் உரிமை உள் ளது என ஹிந்து திருமண சட்டப் பிரிவு 16 (1) (2)இல் கூறப்பட்டுள்ளது.
ஹிந்து வாரிசு சட்டப் பிரிவு 6-இன் படி, உயிரி ழப்பதற்கு முன்பு நடை பெறும் பூர்வீக சொத்தின் பாகப் பிரிவினையின் போது, ஹிந்து ஒருங்கி ணைந்த குடும்பத்தின ருக்கு சட்டபூர்வ அங்கீ காரம் அளிக்கப்பட்டுள் ளது. அதுபோல, செல் லாத அல்லது உறவு முறிந்த திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகள், அவர்களது பெற்றோர் உயிரிழந்தாலும் அவர் களின் பூர்வீக சொத்தில் பங்கு பெற ஆண், பெண் இருவரும் சட்டபூர்வ அங்கீகாரம் உள்ளது.
ஹிந்து மிதாக்ஷரா சட்டத்தின் கீழ் வரும் ஹிந்து ஒருங்கிணைந்த குடும்ப சொத்துகளுக்கு மட்டும் இந்தத் தீர்ப்பு பொருந்தும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தத் தீர்ப்பின் முழு விவரம் வெளியாகவில்லை. செல்லாத அல்லது உறவு முறிந்த திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைக ளுக்கு பெற்றோரின் பூர் வீக சொத்துகளில் உரிமை இல்லை என்று உச்சநீதி மன்ற இரு நீதி பதிகள் அளித்த உத்தரவுக்கு மாறுபட்டு மூன்று நீதி பதிகள் தற்போது தீர்ப்பு அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment