வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அருகே உள்ள கந்த னேரியில் தி.மு.க. முப்பெரும் விழா 17.9.2023 அன்று நடைபெற்றது. விழாவிற்கு பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள். முதன்மை செய லாளர் கே.என்.நேரு வாழ்த்தி பேசினார்.
வேலூர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் வரவேற்றார்.
இதில் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பெரியார் விருதை சத்தியசீலனுக்கும், அண்ணா விருதை சுந்தரத்துக்கும், கலைஞர் விருதை அமைச்சர் இ.பெரிய சாமிக்கும், பாவேந்தர் விருதை மலிகா கதிரவனுக்கும், பேராசிரியர் விருதை ராமசாமிக்கும் வழங்கி பேசினார். அப்போது முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய தாவது:-
இன்றைக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி, தமிழினத்தின் வளர்ச்சி பலருக்கும் பொறாமை ஏற்படுத் தும் வளர்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாடு என்ற மாநிலத்தை அதற்கான உரிமைகளை சிதைப் பது மூலமாக நம்முடைய மாநில மக்களின் வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார்கள். அதைத்தான் பட்டவர்த்தனமாக பா.ஜ.க. செய்துகொண்டு வருகிறது.
ஜி.எஸ்.டி. மூலமாக மாநில உரி மையை பறித்தார்கள். ஒரு மாநில அரசை நடத்துவதற்கு மிக முக்கிய மான நிதி ஆதாரம் என்பது வரி வருவாய்தான். அந்த வரிவருவாயை கபளீகரம் செய்ததன் மூலமாக மாநில அரசை செயல்படவிடாமல் முடக்குகிறார்கள். மக்களுடன் நேரடியான தொடர்பைக் கொண் டது மாநில அரசுகள்தான்.
நிதி ஆதாரங்களை கிடைக்க விடாமல் செய்வதற்காகவே ஜி.எஸ்.டி.யை கொண்டுவந்து, நிதி வருவாய் வாசல்களை அடைத் தார்கள். நான் கேட்பது, நிதியை வசூல் செய்கிறீர்களே, அதை முறை யாக பிரித்துக்கொடுக்கிறீர்களா? அதுவும் இல்லை.
இரக்கமற்ற அரசு
மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவை சிதைப் பதற்காக கொண்டுவரப்பட்டது தான் நீட் தேர்வு. லட்சக்கணக்கில் செலவு செய்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள்.
சில தனியார் 'கோச்சிங் சென் டர்'களின் லாபத்துக்காகவே இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அனிதா முதல் ஜெகதீஸ்வரன் வரை ஏராள மான மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்திருக்கிறார்கள். இத்த கைய உயிரிழப்புகள் இப்போது வட மாநிலங்களிலும் நடக்க ஆரம் பித்திருக்கிறது. இதற்கான கார ணத்தை மத்திய பா.ஜ.க. அரசு ஆராய்ந்ததா? இரக்கமற்ற அரசா கத்தானே மோடி அரசு இருக்கிறது.
முற்றுப்புள்ளி
சரி என்ன சாதனை இந்த 9 வருடத்தில் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால், 2014ஆ-ம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது சமையல் சிலிண்டர் விலை ரூ.420. இதை ரூ.1,100-க்கு உயர்த்தியதுதான்.
மோடியின் சாதனை. மூன்று மடங்கு உயர்த்தினார்கள். தேர்தல் வருவதால் கண்துடைப்பு நாடக மாக, இப்போது ரூ.200-அய் மட் டும் குறைத்திருக்கிறார்கள். இதை மக்கள் நம்புவார்களா?. பணவீக்கம் அதிகமாகி இருக்கிறது. இப்படி வேதனையை மட்டுமே மக்களுக்கு தந்த பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தாக வேண்டும்.
அண்மையில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கையின்படி மட்டும் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்திருக்கிறது. இத் தகைய ஊழல் முகத்தை மறைக்க பார்க்கிறார்கள்.
இந்த ஊழல் முகத்தை கிழித் தெறிய வேண்டும். இதுதான் நம் முன் இருக்கும் முக்கிய கடமை.
பா.ஜ.க.வின் ஊழல் முகத்தை பொதுமக்கள் மத்தியில் அம்பலப் படுத்தி ஆகவேண்டும்.
அரசியல் கடமை
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், நமது கூட்டணிதான் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதி களிலும் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். அதில் எந்த மாற்ற மும் இல்லை. தமிழ்நாட்டில் மட் டும் நாம் வெற்றி பெற்றால் போதாது. இந்தியா முழுமைக்கும் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால் தான் 'இந்தியா' கூட்ட ணியை உரு வாக்கி இருக்கிறோம்.
நம்முடைய ஆட்சி மத்தியில் அமைந்தால் இங்கு நாம் அமல் படுத்திவரும் திராவிட மாடல் திட் டங்களை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டுசேர்க்க முடியும்.
இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித்தரத்தான் நாடாளு மன்ற தேர்தல் வரப்போகிறது. இந்தியாவைக் காக்க 'இந்தியா' கூட்டணியை வெல்ல வைக்க வேண்டியது நம்முடைய அரசியல் கடமை மட்டுமல்ல! கொள்கை கடமையும்தான்!.
கலைஞரின் நூற்றாண்டு விழா வில் நாம் எடுத்துக்கொள்ள வேண் டிய உறுதிமொழி என்பது நாடா ளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 இடங்களையும் வெற்றி பெற்றே தீருவோம் என்பதுதான்.
தி.மு.க. பவள விழா ஆண்டில் நாம் எடுத் துக்கொள்ள வேண்டிய உறுதி மொழி என்பது, இந்திய நாடாளுமன்றத்தில் ஆட்சி அதி காரத்தை செலுத்தும் கூட்டணி கட்சியாக நம்முடைய இயக்கத்தை உயர்த்து வோம் என்பதுதான். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment