மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறதா? காரணத்தை அறிய இணையதளம் அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 20, 2023

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறதா? காரணத்தை அறிய இணையதளம் அறிமுகம்

சென்னை, செப். 20- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட 56.50 லட்சம் பேரும் அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள, புதிய இணையதளத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத வர்களுக்கு உரிய காரணத்துடன் 18.9.2023 முதல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது.  குறுஞ்செய்தி கிடைத்த 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், விண்ணப்பம் ஏற்கப்படாத தற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் வகையில், லீttஜீs://ளீனீut.tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தங்களின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, கைப்பேசிக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பயன்படுத்தி கார ணத்தை அறிந்து கொள்ளலாம். அதன்பின், உரிய ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து பலரும் இந்த இணையதளத்தை பயன்படுத்தியதால் முடங்கியது. அதன்பிறகு, அதிகாரிகள் இணையதளத்தை செயல்படுத்தும் நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இதற்கி டையே, குறுஞ்செய்தி பெறப்பட்டவர்கள், நிரா கரிப்புக்கான காரணங்களைத் தெரிந்துகொண்டு, இ_-சேவை மய்யங்கள் மூலம் மீண்டும் விண்ணப்பித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment