பா.ஜ.க. தேசிய தலைமையிடம் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்!
புதுடில்லி, செப். 23 மாநில பா.ஜ.க. தலைவரை மாற்றினால் மட்டுமே கூட்டணியில் தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பா.ஜ.க. தேசிய தலைமையிடம் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்படுவதாக கடந்த சில வாரங்களாக சலசலப்பான சூழல் நிலவி வருகிறது.
மேலும் இதனை மறைமுகமாக உணர்த்தும் வகையில், இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர் களும் மாறி மாறி விமர்சித்துக் கொண்டு கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். மறைந்த தலைவர்கள் குறித்து தொடர்ந்து அண்ணாமலை பேசி வருவதால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அ.தி.மு.க. அறிவித்திருந்தது.
இது தொடர்பாக அண்மையில் விளக்கம் அளித்த தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணா மலை, "அ.தி.மு.க.- பா.ஜ.க இடையே பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை. அ.தி.மு.க.வின் தலைவர்கள் மற்றும் அண்ணாமலை இடையே பிரச்சினை இருப்பதாகவும் தெரியவில்லை. எனக்கு யாருடனும் பிரச்சினை இல்லை. நான் யாரையும் தவறாக பேசவில்லை," என்று தெரி வித்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க. கட்சியின் மூத்த தலைவர்களான மேனாள் அமைச்சர்கள்வேலு மணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி ஆகியோர் அவசர அவசரமாக (22.9.2023) டில்லிக்குப் புறப்பட்டு சென்றனர்.
அ.தி.மு.க. தலைவர்கள் பா.ஜ.க.வுடனான கூட்டணி தொடர்பாக ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்த அதிமுக மூத்த தலைவர்கள் அண்ணா மலையை மாற்ற வேண்டும் என்பதில் ஈபிஎஸ் உறுதியாக இருப்பதாக கூறினர்.
மேலும், மாநில தலைவரை மாற்றினால் மட்டுமே கூட்டணியில் தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பாஜக தேசிய தலைமை யிடம் அதிமுக மூத்த தலைவர்கள் வலியுறுத்தி யுள்ளதாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment