காஞ்சிபுரத்தில் தந்தைபெரியார், அண்ணா, கலைஞர் பிறந்தநாள் விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 24, 2023

காஞ்சிபுரத்தில் தந்தைபெரியார், அண்ணா, கலைஞர் பிறந்தநாள் விழா!

காஞ்சிபுரம்,செப். 24 - காஞ்சிபுரம் - வையாவூர் சாலை, எச். எஸ் அவென்யூ பூங்காவில், 17.9.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி அளவில், காஞ்சி தமிழ் மன்றத்தின் ஆறாவது நிகழ்ச்சி யாக தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலை ஞர் ஆகியோரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ர.உஷா அனைவரையும் வர வேற்றார். எழுச்சிப் பாடகர் உலகஒளி, பெரியார், அண்ணா, கலைஞர் குறித்து பாடல்களைப் பாடினார். காஞ்சி தமிழ் மன்றத் தின் அமைப்பாளர் முனைவர் பா. கதிரவன் தலைமை வகித்து, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலை ஞர் ஆகியோரின் சிறப்புகள் குறித்தும் கூட்டத்தின் நோக்கம் குறித்தும் உரையாற்றினார்.

ஒருங்கிணைந்த அண்ணா நகர் குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் மோ. பாஸ்கரன் முன் னிலை வகித்து உரையாற்றினார். 

கவிஞர் நரேந்திரன், அறிஞர் அண்ணாவின் சிறப்புகளை, அனைவரையும் ஈர்க்கும் வகை யில் கவிதை பாடினார்.  

கவிஞர் அமுதகீதன், தந்தை பெரியாரின் ஸநாதன எதிர்ப்பு, சட்ட எரிப்பு, மனுதர்ம எரிப்பு, தமிழ்நாடு நீங்கலான தேசப்பட எரிப்பு முதலியவை குறித்த கவிதை நெருப்பைப் பற்ற வைத்தார். 

பேசும் கலை வளர்ப்போம் அமைப்பின் அமைப்பாளர் சித்த மருத்துவர் மு. ஆறுமுகம், முத்தமிழறிஞர் கலைஞரின் சிறப்புகளையும் கலைஞருக்கும் தம் குடும்பத்திற்குமான தொடர் புகளையும் எடுத்துக்காட்டி உரையாற்றினார். 

அண்ணா பேரவையின் பொறுப்பாளர் வழக்குரைஞர் பூ.ராஜி, அறிஞர் அண்ணாவின் சிறப்புகளையும் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நூலின் செய்திகளையும் எடுத்துக் காட்டி உரையாற்றினார். 

தந்தை பெரியாரைப் பற்றி, காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி, பெரியா ரின் சமூகநீதி, ஸநாதன எதிர்ப்பு, அண்ணாவின் சாதனைகள், கலைஞருக்கு சிலை வைத்த செய்தி, பெரியாரின் மற்ற தொண்டுகள் குறித்தும் உரை யாற்றினார். 

நிகழ்ச்சியில் கி. இளையவேள், தமுஎசக கவிஞர் கு. ஆறுமுகம், மருத்துவர் சத்தியபிரியா, ஜெயந்தி அம்மாள், கலாபாபு, சேகர், பானுமதி, கஸ்தூரி , சரண்யா , தயாநிதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆசிரியர் புகழேந்தி, சிறீராம் சப்ளையர்ஸ் கே. டில்லி, கவிஞர் நரேந்திரன், தயாளன் , ஜிஷ்ணு பிரசாத் ஆகியோர் நிகழ்ச்சி சிறப் பாக நடைபெற உதவி செய்தனர். 

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனை வருக்கும் தே. நாகராஜன் நன்றி கூறினார்.

அனைவருக்கும் இயக்க நூல் கள் பரிசாக வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment