தொழிலாளர்களை மிரட்டும் சுற்றறிக்கையை வெளியிடுவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 5, 2023

தொழிலாளர்களை மிரட்டும் சுற்றறிக்கையை வெளியிடுவதா?

என்.எல்.சி. அதிகாரி மீது நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு

நெய்வேலி, செப். 5- என்எல்சி சுரங்க தீ விபத்தில் உயிரிழந்தவர்களின்  குடும்பத் தினரை மிரட்டும் வகையில் சுற்றறிக்கை பிறப்பித்த என்எல்சி மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டீக்காராமன், தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார்.

நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி, 5ஆ-வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீப்பிடித்ததில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலை யில், சிலர் காயமடந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை பதிவு செய்த வழக்கில் முன் பிணை கோரி, என்.எல்.சி. அதிகாரி களான கோதண்டம், முத்துக்கண்ணு உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன் றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.  முன் பினை வழங்கக் கூடாது என்று உயிரி ழந்த தொழிலாளர்களின் குடும்பத் தினர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப் பட்டது.

இதுதொடர்பாக மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்திய நிலையில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்.எல்.சி. மனித வள மேம் பாட்டு துறை அதிகாரி பிறப்பித்த சுற்ற றிக்கை உளவியல் ரீதியாக அச்சத்தை ஏற்படுத்துவதால், மனுவாக தாக்கல் செய்ய இயலவில்லை என தெரிவிக்கப் பட்டது.

இந்த  வழக்கில் நேற்று (4.9.2023) உத்தரவு பிறப்பித்த நீதிபதி RMT. டீக்கராமன், தீ விபத்து குறித்த விசா ரணை அறிக்கையை செப்டம்பர் 25ஆம் தேதி தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். 

அதேசமயம் மனுதாரர்களில் சிலர் பணியில் இருப்பதாலும், சிலர் ஓய்வு பெற்றுவிட்டதாலும் அறிக்கை தாக்கல் செய்யும் வரை மனுதாரர்களை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட் டுள்ளார்.

மேலும், மனுதாரர்களுக்கு முன் பிணை வழங்கக் கூடாது என உயிரிழந் தவர்களின் குடும்பத்தினர் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யும்படி ஆகஸ்ட் 17ஆம் தேதி நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில், அன்று மாலையே என்எல்சி மனித வளம் மேம்பாட்டு துறையின் உதவி பொது மேலாளர் வெளியிட்ட சுற்றறிக்கையை நீதிபதி சுட்டிக்காட்டி உள்ளார்.

அதில் நிறுவனத்திற்குள் நடை பெறும் விவகாரங்களை வழக்குரைஞர் களிடம் பகிரக்கூடாது என்றும், மீறி னால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் குறிப்பிட்டதை சுட்டிக் காட்டிய நீதிபதி, இது பணிநீக்கம் செய்யப்படுவோமோ என்ற அச்சத்தை தொழிலாளர் மத்தியில் ஏற்படுத்தி இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள் ளார்.

மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரியின் இந்த செயல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுக்க உகந்த வழக்கு என்று கூறியுள்ள நீதிபதி டீக்காராமன், இந்த விவகாரத்தை நீதி மன்ற அவமதிப்பு வழக்காக எடுக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய் துள்ளார். மேலும் இந்த சுற்றறிக்கையை பிறப்பித்த மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியின் பெயர் உள்ளிட்ட தகவலை மூன்று நாட்களில் தாக்கல் செய்ய வேண்டுமென என்எல்சி நிறுவ னத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment