கரையவில்லையாம் - கரை ஒதுங்கியதாம் பரிதாப பிள்ளையார் பொம்மைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 26, 2023

கரையவில்லையாம் - கரை ஒதுங்கியதாம் பரிதாப பிள்ளையார் பொம்மைகள்

சென்னை, செப். 26 -  சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் 20-க்கும் மேற்பட்ட சிலைகள் கரையாமல் கரை ஒதுக்கின.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பொது இடங்களில் நிறுவப்பட்டு சிறப் புப் பூஜைகள் நடத்தப் பட்டன.

இந்த சிலைகள் பலத்த காவல்துறை பாதுகாப் புடன்  முன்தினம் சென்னை மாநகர கடலோரப் பகுதிகளான பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் கரைக்கப்பட்டன. இந்த சிலைகள் கரைக்கப்பட்ட பகுதியில் கடல் நீர் பச்சை நிறத்தில் மாறியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட சிலைகள் கரையாமல் கரை ஒதுங்கியுள்ளன. 

இந்நிலையில் பட்டி னப்பாக்கம் பகுதியை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன்  நேரில்ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட் டாலும், அதிக அளவி லான (சுமார் 1300) சிலை கள் பட்டி னப்பாக்கத்தில் தான் கரைக்கப்பட்டன. 

அவற்றில் சுமார் 50 சிலைகள் கரை ஒதுங்கின. 20 பெரிய சிலைகள் கடலுக்குள் செல்லாமல் தடுமாறின. பெரிய சிலை களை மீண்டும் கடலில் கரைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

கரையாமல் கரை ஒதுங்கும் கட்டைகள் போன்றவை தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின் றன. 140 தூய்மைப் பணி யாளர்கள் மற்றும் மீனவ தன்னார்வலர்களுடன் இப்பணிகளை மேற் கொண்டு வருகிறோம். ஏற்கெனவே இப்பகுதி யில் கட்டைகள், பூக்கள் உள்ளிட்ட 40 டன் கழிவு களை அகற்றி இருக்கி றோம்.

கடல் எல்லாவற்றை யும் உள்வாங்கிக் கொள் ளாது. வரும் காலங்களில் சுற்றுச்சூழலுக்கு மாசில் லாத விநாயகர் சிலை களைச் செய்யுமாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத் தப்படும். இவ் வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment