முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பு
சென்னை, செப்.9 சாலைகளில் பாது காப்பை உறுதிசெய்ய மேற்கொள்ளப் படும் திட்டத்தின் ஒரு அங்கமாக, சாலை விபத்துகளில் சேதமடைந்த வாகனங்களில் சிக்கிக்கொள்பவர்களின் உயிரை காப்பதற்கு, ஒரு தனித்துவமான மற்றும் முன்னோடியான முயற்சியாக மீட்பு வாகனம் ஒன்று உருவாக்கப்பட் டுள்ளது.
இந்த முயற்சி, இந்தியாவிலேயே முதல் முறையாக திட்டமிடப்பட்ட தாகும். இது, சாலை விபத்தில் சிக்கி சேதமடைந்த வாகனங்களில் சிக்கிக் கொள்பவர்களை, தேவையான அனைத்து கருவிகள் மற்றும் நன்றாக பயிற்சி பெற்ற காவல் குழுவினர் உதவியுடன் மீட்பதற்கான ஒரு முன் னோடி திட்டமாகும். இதற்காக பயன் படும் வாகனத்திற்கு வீரா (அவசரகால மீட்பு மற்றும் விபத்துக்களிலிருந்து மீட்கும் வாகனம்) என்று பெயரிடப் பட்டுள்ளது. இந்த முயற்சி, ஹூண்டாய் குளோவிஸ் மற்றும் இசுசூ மோட் டார்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கார்ப ரேட் சமூக பொறுப்பு திட்டமாகும். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை மற் றும் மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவை இந்தத் திட்டத்திற்கு தங்களது நிபுணத்துவம் மற்றும் பங்களிப்பை அளித்துள்ளன.
அந்தவகையில், சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில், சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்டெடுக்கும் பணிக்காக, வீரா வாகனத்தின் பயன்பாட்டை சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (8.9.2023) கொடியசைத்து தொடங்கி வைத்து, அதுபற்றிய காவல்துறையினரின் செயல்முறை விளக்கத்தை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment