புதுடில்லி,செப்.29 - நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக எடுத்திருந்தாலும் எம்.டி.எம்.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று ஒன்றிய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு கடந்த செப்.20 அன்று அறிவிப்பு வெளியிட்டது.
ஏற்கெனவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில் 3-ஆவது சுற்று கலந்தாய்வில் பங் கேற்கும் மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை எதிர்த்து ஏற்கனவே முது நிலை நீட் தேர்வு எழுதிய 3 மருத்துவ மாணவர்கள் டில்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ஒன்றிய அரசின் அறிவிப்பு காரணமாக நீட் முதுநிலை தேர்வின் நோக்கம் சிதைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புருஷேந்திர குமார் கவுரவ், இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம், தேசிய தேர்வுகள் வாரியம் மற்றும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டிக்கு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment