பகுத்தறிவு எழுத்தா ளர் மன்ற மாநில துணைத் தலைவர் ஞான.வள்ளுவன் தலைமை யேற்க மாவட்ட திரா விடர் கழக தலைவர் கடவாசல் குணசேகரன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற ஒருங்கிணைப்பா ளர் இரெ.செல்லதுரை, பகுத்தறிவாளர் கழக நகர செயலாளர் தங்க.செல்வராஜ், சீர்காழி நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் கோ.சட்ட நாதன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். பகுத் தறிவு எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர் கி.தளபதிராஜ் அனைவ ரையும் வரவேற்று நிகழ்ச் சியை ஒருங்கிணைத்தார்.
பகுத்தறிவாளர்கழக தோழர்கள் மேனாள் வட்டாட்சியர் இராம கிருஷ்ணன், கனரா வங்கி மேனாள் மேலாளர் ஆறாவதி ஆர்.எம்.எஸ். சாமிகணேசன், பெரியார் தொண்டர் இரஷீத்கான் மற்றும் பலர் உரையாற்றி யதைத் தொடர்ந்து திரா விடர் கழகப் துணைப் பொதுச்செயலாளர் வழக் குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில், இன்றைய சூழலில் பெரியாரின் தேவை தமிழ்நாட்டை தாண்டி இந்தியா முழுமைக்கு மான அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக் கிறது. மேலும், வேறு எந்த தலைவரும் காவி கூட்டத்திற்கு ஏற்படுத் தாத அச்சத்தை பெரியா ரின் சித்தாந்தம் ஏற்படுத்தி இருக்கிறது என்பதற் கான சான்றுகளுடன் எடுத்துரைத்தார். குறிப்பாக, ஜாதி ஒழிப்பு என்ற தளத்தில் பெரியார் முன்னெடுத்த முன்னெ டுப்புகள் தொலைநோக் குப் பார்வை வாய்ந்தது என்றும், மதவாதத்திற்கு எதிராக பெரியாரின் சிந் தனை எவ்வாறு செயல் படுகிறது என்பது குறித் தும், பெண்ணுரிமை களத் தில் பெரியார் பேசிய சொற்கள் இன்றும் எவ் வாறு தேவைப்படுகிறது போன்ற செய்திகளை பதிவு செய்தார். பெரியா ரின் 145ஆவது பிறந்த நாள் உறுதி மொழியாக காவி பாசிச மக்கள் விரோத பாஜக அரசை 2024ஆம் ஆண்டு நாடா ளுமன்றத் தேர்தலில் வீழ்த்தி இந்தியா கூட்ட ணியை வெற்றி பெறச் செய்வதே ஆகும் என்று நிறைவு செய்தார். பகுத் தறிவாளர் கழக மாவட் டச் செயலாளர் அ.சாமி துரை நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட கழக துணைச் செயலாளர் அரங்க நாகரத்தினம், மாவட்ட இளைஞரணி தலைவர் க.அருள்தாஸ், மயிலாடு துறை நகர செயலாளர் பூ.சி.காமராஜ், நகர துணைத்தலைவர் இரெ. புத்தன், ஒன்றிய தலைவர் சா.முருகையன், செயலா ளர் கு.இளமாறன், விவ சாய தொழிலாளரணி அமைப்பாளர் கு.இளஞ்செழியன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பூ.பாண்டுரங்கன், சீர்காழி ஒன்றிய செயலாளர் கட வாசல் செல்வம், செம்பை ஒன்றிய தலைவர் கனக லிங்கம், வைத்தீஸ்வரன் கோயில் பேருராட்சி கழக தலைவர் முத்தை யன், செயலாளர் இரா ஜேந்திரன், விடுதலை வாசகர் வட்ட அமைப்பா ளர் ஜெகன்.சாமிக்கண்ணு, மேனாள் வட்டாட்சியர் இராமதாஸ்,கருவூல அலுவலர் சுமதி, பி. இராஜேந்திரன், மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment