புதுடில்லி, செப்.15, 'இந்தியா' கூட்டணியில் தொகுதி பங் கீட்டில் சிக்கல் எழுந்தால் அதற்கு தீர்வு காண புதிய வழிமுறை கண்ட றியப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக, 28 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத் துள்ளன.
இக்கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதலாவது கூட்டம் 13.9.2023 அன்று டில்லியில் நடந் தது. அதில், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்கி முடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பின்பற்ற வேண் டிய அணுகு முறை குறித்து ஒரு முக்கியமான எதிர்க்கட்சியின் வட் டாரங்கள் கூறியதாவது:-
தொகுதிப் பங்கீட்டு பேச்சு வார்த்தை மாநில அளவில் நடத் தப்படும். தொகுதிவாரியாக, பா.ஜனதாவை எதிர்க்க வலிமை யான கட்சிக்கு அந்த தொகுதி ஒதுக்கப்படும். வலிமையான கட் சியை தீர்மானிக்க முந்தைய தேர்தல் முடிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். முந்தைய நாடாளுமன்ற தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தல் அல்லது இரண்டு தேர்தல்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எந்த தேர்தலை கணக்கில் எடுப்பது என்பதை சம்பந்தப்பட்ட கட்சிகள் முடிவு செய்யும். ஒரு மாநிலத்தில், 'இந்தியா' கூட்டணியின் 2 கட்சிகளுக்கிடையே இதற்கு முன்பு கூட்டணி இல்லாமல் இருந்தாலோ அல்லது பேச்சுவார்த்தையில் சிக் கல் எழுந்தாலோ, அந்த மாநிலத்தில் இடம் பெறாத வேறு ஒரு கூட்டணி கட்சி, பேச்சுவார்த்தையில் பாலமாக செயல்படும். இது, நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியாக இருந்தபோதிலும், வரவிருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கும் கூட்டணியாக செயல்பட வேண்டும். அப்போது தான் சட்டமன்ற தேர்தல்களிலும் பலன் கிடைக்கும். காஷ்மீர், மராட் டியம், பீகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை ஏற்கெனவே நடந்து வருகிறது. அங்கெல்லாம் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் ஏற்க னவே கூட்டணியாக இயங்கி வருகின்றன. இவ்வாறு அந்த வட்டா ரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment