இதை, மேயர் ஆர். பிரியா துவக்கி வைத்து பேசியதாவது:
உயிருக்கு ஆபத்தான விபத்து, மாரடைப்பு ஏற்பட்டால் உயிர் காக்கும் கருவியாக, 'டிபிரிலேட்டர்' எனும் கருவி இருக்கும். சுயநினைவு இல்லாமல் இருக்கும் நபரை மீட்டு இதயத் துடிப்பு சீராக்க இக்கருவி உதவும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், இக்கருவி பொருத்தப் படும்.
தானியங்கி குரல் அறிவுறுத்தல்களை பின்பற்றி பொதுமக்கள் எளிதாக பயன்படுத்த முடியும். இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த, மாநகராட்சி ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப் படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தெற்கு மாவட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு, இந்த முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. சாலை விபத்தில் சிக்கிய நபருக்கு உடனடி முதலுதவி சிகிச்சை எப்படி அளிக்க வேண்டும் என, அப்போலோ மருத்துவ மனை ஊழியர்கள் பயிற்சி அளித்தனர்.
No comments:
Post a Comment