சென்னை, செப்.7 மாநில அரசின் கருத்தை ஏற்காமல் துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக் கழக மானியக் குழு சார்பில் உறுப்பினர்களை நியமித்து ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழ்நாடு ஆளுநர் இருந்து வருகிறார். பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு மாநில அரசு சார்பில் நியமிக்கப்பட்டு, அந்த தேடுதல் குழு பரிந்துரைக்கும் 3 பேரில் தகுதியானவர் களை தான் ஆளுநர் தேர்வு செய்கிறார்.
துணைவேந்தரை நியமனம் செய்வதற்கு அமைக்கப்படும் இந்த தேடுதல் குழுவில், வேந்தர் சார்பில் ஒருவரும், பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் ஒருவரும், கல்வி கவுன்சில் சார்பில் ஒருவரும் என மொத்தம் 3 பேர் இடம் பெறுவார்கள்.
இதில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) உறுப்பினர் இடம் பெற வேண்டும் என்று பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் இதனை ஏற்க மாநில அரசு மறுப்பு தெரிவித்தது. இதனால் பல்க லைக்கழக துணைவேந்தர்களை நியம னம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சென்னை பல்கலைக் கழகம் உள்ளிட்ட 3 பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு அமைத்து ஆளுநர் ஆர். என்.ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தேடுதல் குழுவில் வழக்கமாக 3 உறுப்பினர்கள் இடம்பெறும் நிலை யில், இந்த முறை 4 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் உறுப்பினர் நியமிக்கப்பட்டுள் ளார். பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்ய முன் னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் தலைமையில் குழு அமைக்கப்பட் டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் சுஷ்மா யாதவா தலை மையில் குழு அமைக் கப்பட்டுள்ளது.
அதே போல் சென்னை பல் கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய கர்நாடக ஒன்றிய அரசின் கீழ் வரும் பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.
தற்போது ஆளுநர் நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு எதிராக தேடுதல் குழுவை தன்னிச் சையாக முடிவு செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார். ஆளுநரால் அமைக்கப்பட்டுள்ள இந்த தேடுதல் குழு முழுக்க முழுக்க பல்கலைக்கழக சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு மாறானது. அரசின் அலுவல் விதி களின்படி அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். ஆனால் ஆளுநர் தன்னிச் சையாக அறிவிக்கை வெளியிட்டது. மரபு மற்றும் விதி களுக்கு முரணானது.
தெலுங்கானா மற்றும் குஜராத் மாநில பல்கலைக்கழகங்களில் உள்ளது போல் பல்கலைக்கழக துணைவேந்தரை தெரிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு அளிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா சட்டமன்ற பேரவையில் 25.04.2022 அன்று நிறைவேற்றப்பட்டு 28.04.2022 அன்று ஆளுநரின் ஒப்பு தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இது நாள் வரையில் இந்த மசோதாவிற்கு ஆளுநரிடமிருந்து ஒப்புதல் பெறப்படவில்லை. ஆளுநர் தன்னிச்சையாக பாரதியார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகங் களின் துணைவேந்தரை தெரிவு செய்வ தற்கான தேடுதல் குழுவை அமைத்து வெளியிடப்பட்ட அறிக்கையினை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment