ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 15, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

15.9.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

சிறப்பு நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலை மோடி அரசு மூடி மறைக்கிறது, ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு.

சர்ச்சைக்குரிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மோடி அரசு முயல்கிறதா? தலையங்க செய்தி.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

மோடி அரசுக்கு ஜால்ரா போடும் 14 தொலைக்காட்சி நெறியாளர்கள் நிகழ்ச்சிகளை "இந்தியா" கூட்டணி தலைவர்கள் புறக்கணிக்க முடிவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

முதன் முதலில், மூன்று பெண்களுக்கு கோயில் அர்ச்சகர்களாக தமிழ்நாடு பயிற்சி அளிக்கிறது. இது "உள்ளடக்கம் மற்றும் சமத்துவத்தின் புதிய சகாப்தம்” எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் பெருமிதம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

ஆர்எஸ்எஸ்ஸின் மூன்று நாள் வருடாந்திர ஒருங்கிணைப்புக் கூட்டம் புனேவில் தொடங்குகிறது; பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

பிற மொழிகளை இழிவுபடுத்துவதை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் (டிவிட்டர்) பதிவு.

தி டெலிகிராப்:

காஷ்மீரில் ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில் பாராட்டு விழா தான் மோடிக்கு முக்கியமா என காங்கிரஸ் குற்றச்சாட்டு. பாஜக ஆதரவாளர்களும் எதிர்ப்பு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment