செம்பியம், செப். 3 - பொது வழியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் சுற்றுச்சுவர், நீதிமன்ற உத்தரவுப் படி இடிக்கப்பட்டது. செம்பியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, என்.வி.என் நடராஜன் தெரு, பெரியார் நகர், வியாசர்பாடியில் அமைந்துள்ள சிறீ நாகாத்தம்மன் ஆலயம், 50 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.
தற்போது இந்த ஆலயத்தை அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மேனாள் வட்ட செயலர் ராஜேந்திரன் நிர் வகித்து வருகிறார். இக்கோவிலின் சுற்றுச்சுவர், பொது வழியில் உள்ள பகுதியை 3 அடி ஆக்கிரமித்து, 60 அடி நீளத்திற்கு கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, நீதிமன்றத்தில் பா.ஜ., வட சென்னை மேற்குமாவட்ட துணை தலைவர் வியாசை ஆறுமுகம் வழக்கு தொடர்ந்தார். ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 1.9.2023 அன்று காலை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி சுடலைமுத்து தலைமையிலான அதி காரிகள், கோவில் சுற்றுச்சுவரை இடிக்கச் சென்றனர். ஆனால், 30க்கும் மேற்பட்ட பெண்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்த னர். அதிகாரி களின் சமரச பேச்சை அடுத்து, பெண் கள் கலைந்து சென்றனர். இதையடுத்து கோவிலின் ஆக்கிரமிப்பு சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.
No comments:
Post a Comment