சென்னை,செப்.2- ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு உள்ளிட்ட உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடு களை கண்காணிப்பதோடு, பணம் செலுத்தும் வசதியும் கொண்ட ‘ஸ்மார்ட் ரிங்’ (மோதிரம்) அய்.அய்.டி. மேனாள் மாணவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை அய்.அய்.டி. ஆராய்ச்சி உதவி மய்யம் (இங்குபேஷன் செல்) மூலம் சென்னை அய்.அய்.டி.யின் மேனாள் மாணவர்களைக் கொண்டு ‘மியூஸ் வியரபிள்’ ஸ்டார்ட் அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஏற்கெனவே ஸ்மார்ட் வாட்ச்சுகளை அறிமுகம் செய்து இந்தியா உள்பட 30 நாடுகளில் அதனை விற்பனை செய்கிறது.
இதன் தொடர்ச்சியாக ‘மியூஸ் வியரபிள்’ நிறுவனம் தற்போது ஸ்மார்ட் வாட்ச் போன்று, மோதிர வடிவ தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.
இந்த ‘ஸ்மார்ட் ரிங்’ மூலம் உடல் ஆரோக்கியத்தை 24 மணி நேரமும் மிகத் துல்லியமாக கண் காணிக்க முடியும். ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, உடல் வெப்பநிலை ஆகியவற்றை தெரியப்படுத்தும்; ஸ்மார்ட் வாட்சை விட 10 மடங்கு எடை குறைவானது. 24 மணி நேரம் பயன்படுத்தினாலும், 7 நாள்களுக்கு பேட்டரி பயன்படும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
உடல் ஆரோக்கியத்தை கண் காணிப்பதோடு மட்டுமல்லாமல், இதன் மூலம் பணம் செலுத்துவதற் கான வசதியும் இந்த தொழில் நுட்பத்தில் புகுத்தப்பட்டு இருக் கிறது. இதற்காக மாஸ்டர் கார்டு, விசா, ரூபே போன்ற கட்டண நெட்வொர்க்குடன் ‘மியூஸ் வியர பிள்’ நிறுவனம் கூட்டு சேர்ந்து இருப்பதாக சென்னை அய்.அய்.டி. யின் மேனாள் மாணவர்கள் கே.எல். என்.சாய்பிரசாந்த், கே.ஏ.யஜீந் திர அஜய் ஆகியோர் தெரிவித் தனர். ‘மேக் இன் இந்தியா’ பிரசாரத்தின் உதார ணமாக, இந்த ‘ஸ்மார்ட் ரிங்’ முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப் பட் டது ஆகும்.
இது செப். 27-ஆம் தேதி உலக ளவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்தியாவில் வரும் அக்டோபர் 25-ஆம் தேதி முதல் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment