ஜெய்ப்பூர், செப்.11- ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ‘போல் டிராக்கர்’ என்ற அமைப்பு சார்பில் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஜூலை 1 அன்று துவங்கி செப் டம்பர் 5 வரை 1 லட்சத்து 81 ஆயிரத்து 25 ஆயிரம் பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப் பட்ட நிலையில், அதன் முடிவு களை போல் டிராக்கர் வெளியிட்டுள்ளது.
அதில், ராஜஸ்தான் மாநி லத்தில் இந்த முறையும் பாஜக தோல்வியையே சந்திக்கும்; காங்கி ரஸ் கட்சி ஆட்சியைத் தக்கவைக் கும் என்று கூறப்பட்டுள்ளது.
200 இடங்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப் பேரவையில், பெரும்பான்மைக்கு 101 இடங்கள் வேண்டும். ‘போல் டிராக்கர்’ நடத் திய கருத்துக் கணிப்பில், பாஜக 42.6 சதவிகித வாக்குகளுடன் 67 முதல் 86 இடங்களையே பெற வாய்ப்பு உள்ளதாகவும், அதே நேரத்தில் காங்கிரஸ் 46.2 சதவிகித வாக்குகளுடன் குறைந்தபட்சம் 108 இடங்கள் முதல் 124 இடங்கள் வரை பெற வாய்ப்பு இருப்ப தாக வும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இரண்டு கட்சிகளும் அல்லாதவர்கள், 11.2 சதவிகித வாக்குகளுடன், குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சம் 12 இடங்களைப் பெறு வார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment