ஒன்றிய பிஜேபி அமைச்சர் காட்டுமிராண்டிப் பேச்சு
ஜெய்ப்பூர், செப் 13 ஸனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்குவோம் என்று ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசி யுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதையொட்டி அங்கு பார்மர் நகரில் நடந்த பா.ஜ.க. தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
"ஸனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்க வேண்டும்; கண்ணை நோண்ட வேண்டும். ஸனாதனத்திற்கு எதிராக பேசும் யாரும் அரசியல் அதிகாரம் அந்தஸ்த்தை தக்கவைக்க முடியாது.
நமது முன்னோர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஸனாதன தர்மத்தைப் பாதுகாத்தனர். ஸனாதனத்தை ஒழிப்பதாக பேசுபவர்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்" என்று கூறினார்.
No comments:
Post a Comment