கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 2, 2023

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார்

அமைச்சர் தா.மோ. அன்பரசன் தகவல்

காஞ்சிபுரம், செப். 2 காஞ்சிபுரம் ஆட்சியர் அலு வலக கூட்ட அரங்கில் அமைச்சர் தா.மோ.அன் பரசன் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்ட தொடக்க விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர்.எம்.சுதாகர், மாநக ராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்தக் கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு விழா நடைபெறும் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களுக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை மற்றும் சுகாதாரத் துறை போன்ற துறைகளில் மேற் கொள்ளப்பட வேண்டிய பணி களின் விவரம் குறித்து கேட்டறிந்தார்.

போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படாத வகையில் சிறப்பு விருந்தினர்கள் வரும் வழியை ஏற்படுத்தி தருமாறு காவல்துறை யினருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். ஆலோ சனைக் கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் விழா நடைபெறவுள்ள காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன் னேற்பாட்டு பணிகளை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். 

பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது:-

முதலமைச்சர் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது. முன்னாள் முதலமைச்ச்சர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே நேரில் வந்து திட்டத்தைத் தொடங்கி வைக்க இருக்கிறார். காஞ்சிபுரம் பச் சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் விழா காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளதால் விழா நடைபெறும் இடத்தைத் தேர்வு செய்து மேடை அமையவுள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறோம். 

இவ்வாறு அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார். 

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முக மையின் திட்ட இயக்குநர் செல்வக்குமார், மாநக ராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment