கோவை, செப்.26 கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த வடசித்தூரில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் பாஜக பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். வடசித்தூரை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் கோகுல், ராஜா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத் துக்கடவு அருகே உள்ள வட சித்தூரில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வரு கிறார்கள். சமத்துவபுரம் நுழைவு வாயிலில் மார்பளவு கொண்ட பெரியார் சிலை வைக்கப்பட்டு உள்ளது. கம்பி வேலி அமைக்கப் பட்டு அதற்குள் சிலை மிகவும் பாதுகாப்புடன் இருந்தது. இந்தநிலையில் செப்.20ஆம் தேதி காலை பெரியார் சிலை மீது யாரோ மாட்டு சாணத்தை வீசி அவமதிப்பு செய்து இருந்தனர்.
அங்கு திரண்ட திராவிடர் கழகம் திமுக, விடுதலை சிறுத் தைகள் கட்சியினர், பெரியார் சிலையை அவமரியாதை செய்த வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி முழக்கமிட்டனர். காவல் துறையினர் அவர்களை சமாதா னப்படுத்தி அனுப்பி வைத்தனர். . பின்னர் சிலையின் மீது வீசப்பட்டு இருந்த சாணத்தை தண்ணீர் ஊற்றி கழுவினர்.
இந்த செயலில் ஈடுபட்டது யார், எதற்காக ஈடுபட்டனர் என்று காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று (26.9.2023) கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த வடசித்தூரில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் பாஜக பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர் வடசித்தூர் பகுதியில் பாஜக பிரமுகர்களாக வலம் வரும் கோகுல் மற்றும் ராஜா ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் குற்றவாளிகள் என்று உறுதி யானது. பின்னர் அவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment