இது என்ன புது கரடி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 27, 2023

இது என்ன புது கரடி!

பிஜேபி பற்றி கருத்து சொல்ல நிர்வாகிகளுக்கு தடையாம்!

அ.தி.மு.க. தலைமை உத்தரவு

சென்னை,செப்.27- கூட்ட ணியை விட்டு விலகிய நிலையில், பா.ஜனதா பற்றி கருத்து சொல்ல அ.தி. மு.க. நிர்வாகிகளுக்கு தடை விதித்து கட்சித் தலைமை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பா.ஜனதா உடனான கூட்டணியை அ.தி.மு.க. நேற்று முன்தினம் (25.9.2023) முறித்துக் கொண்டது. அக்கட்சி யின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட் டது.

இந்த கூட்டத்திலேயே கட்சி நிர்வாகிகளுக்கு சில வாய்மொழி உத்தர வும் போடப்பட்டுள்ளது. அதாவது, கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர் கள், ஒரு சில நிர்வாகிகளை தவிர வேறுயாரும் தொலைக்காட்சி விவா தங்களில் கலந்து கொண்டோ அல்லது பொது வெளியிலோ கருத்து தெரிவிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தடை

பா.ஜனதா உடனான மோதல் உச்சத்தை எட்டிய நிலையில்தான் இந்த கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு பிறகும் பா.ஜனதா கட்சி குறித்தோ, அக்கட்சி தலைவர்கள் குறித்தோ கருத்து தெரிவித்தால், அது மேலும் பிரச்சினைகளை உருவாக்கும் என்று கட்சி மேலிடம் கருதுகிறது.

ஏற்கெனவே, மேனாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ ஆகியோர் தெரிவித்த கருத்துகள் பா.ஜனதா தலைவர்களை கோபம் அடையச் செய்தது. அக்கட்சியின் மாநில தலைவர் அண் ணாமலை தெரிவித்த சில கருத்துகளும் அ.தி.மு.க. நிர்வாகிகளை எரிச்சல் அடைய செய்தது.

இதுபோன்ற வார்த் தைப் போர் இறுதியில், கூட்டணியில் பிளவை ஏற்படுத்திவிட்டது. இந்த நிலையில்தான், பா. ஜனதா குறித்து கருத்து தெரிவிக்க அ.தி.மு.க. நிர் வாகிகளுக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment