புதுடில்லி, செப்.10 'ஜி-20' மாநாட்டுக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டில்லி வந்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
'குறைந்த, நடுத்தர வருவாய் நாடுகளுக்கு உதவுவதற்காக ஜி-20 நாடுகளின் ஆதரவுக்கு அதிபர் ஜோ பைடன் வலியுறுத்துகிறார். உலக வங்கியின் நிதிநிலைமையை ஒருமுறை உயர்த்தும் வகையில், ஜி-20 நாடுகள் அதற்கு பங்களிப்பு செய்ய வேண்டும். அது, உலக வங்கியின் ஆண்டு சலுகை அல்லாத கடன் தொகை அளவின் 3 மடங்குக்கு இணையாக இருக்க வேண்டும். இந்த முயற்சி, உலக வங்கியை வலுவான அமைப்பாக மாற்றும்.
மேலும் ஏழை நாடுகளின் அவசர தேவைகளுக்கு உதவ முடியும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment