மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 27, 2023

மறைவு

உரத்தநாடு ஒன்றியம் நெடுவாக் கோட்டை பெரியார் பெருந்தொண்டர் மு.முருகையன் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று (27.92023) மாலை ஒரத்த நாடு ஒன்றியம் நெடுவாக்கோட்டை - அவரது இல்லத் தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்படு கிறது. தந்தை பெரியார் நடத்திய பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம், ‘முரளிஸ் கபே' மறியல் போராட்டம், குலக்கல்வி திட்ட எதிர்ப்புப் போராட்டம். ராமர்படம் எரிப்புப் போராட்டம் உள்ளிட்ட கழகம் நடத்திய அத்துனை போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்றவர். அவருக்கு மு.காமராஜ், வழக்குரைஞர் மு.வீரமணி, மு.ஆனந்தன் ஆகிய மகன்களும் பானுமதி, நவமணி, அஞ்சலிதேவி, ஆகிய மகள்களும் உள்ளனர். 

குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், அவரது மகன் மு.வீரமணியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment