ஈனமலரே - விழிப்போடு இருக்கிறது திராவிட இயக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 4, 2023

ஈனமலரே - விழிப்போடு இருக்கிறது திராவிட இயக்கம்

கல்வித்துறையில் இந்தியாவிற்கே வழிகாட்டி யாக தமிழ்நாடு அன்று முதல் இன்று வரை திகழ்ந்துவருகிறது.

மருத்துவம் பயில சமஸ்கிருதம் தேவை என்பதை ஒழித்து வரலாறு படைத்தது நீதிக்கட்சி. மதிய உணவு திட்டம் செயல்படுத்தி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவச் செய்தது நீதிக் கட்சி. 

மதிய உணவு திட்டம் துவங்கி சத்துணவு திட்டம், காலை உணவு திட்டம் என தொடர்ந்து வழிகாட்டுகிறது திராவிட இயக்கம் . 

பள்ளிச் சீருடை, பாடப்புத்தகங்கள், காலணிகள், பேருந்து பயணம், மிதிவண்டி, கணினி என எண்ணற்ற கல்விசாதனைகளை படைத்து வருகிறது திராவிட இயக்கம். 

குலக் கல்வி முறையை கொண்டு வந்த பூணூல் கூட்டத்தின் அடியொற்றியான பார்ப்பன " ஈனமலர்" காலை உணவுத் திட்டத்தை பற்றி கொச்சையாக எழுதுகிறது.  

தேசத் தந்தை காந்தியார் அவர்களை கொன்று , நாட்டின் முதல் வன்முறையை அறிமுகம் செய்த பார்ப்பன கூட்டம், பச்சைத் தமிழர் காமராசர் அவர்களை கொலை செய்ய முயற்சி செய்த கூட்டம் , என்று நாட்டில் தொடர்ந்து வன்முறைக்கு காரணமான பூணூல் பார்ப்பன  (ஈனமலர் ) கூடாரத்திற்கு கல்விப் புரட்சி என்றால் கசக்கத் தான் செய்யும். 

உண்மையின் உரை கல் என தனக்குத் தானே பெயர் சூட்டி கொண்டு நாளிதழ் என்ற பெயரில் பார்ப்பன ஆணவத்தோடு, தினமும் வன்மத்தை கக்குகிறது (எழுதுகிறது). ஈனமலர் நாளிதழ் என்றாலே பொய்யின் இருப்பிடம். பொதுவான கருத்துகள், நாட்டிற்கு பயன்தரும் செயல்கள் என எதுவும் கிடையாது ஈனமலரில். 

மாறாக , திராவிட இயக்கத் தலைவர்களை சீண்டுவது, தனக்கு தானே பெயரிட்டு  இது உங்கள் இடம் பகுதியில் தரக்குறைவாக எழுதுவது, 

டவுட் தனபாலு என்ற பெயரில் (அ) யோக்கியமாக  எழுதுவது என்பது தான் இந்த ஈனமலர் செய்யும் தலையாய பணியாகும். 

உலகிலேயே தான் மட்டுமே யோக்கியன், உத்தமன் என்ற நினைப்பு இன ஈனமலருக்கு, 

திராவிட இயக்க தலைவர்களான அய்யா, அண்ணா, கலைஞர், ஆசிரியர், தளபதி மு.க. ஸ்டாலின், வைகோ  மற்றும் திருமாவளவன் ஆகியோரின் மீது வன்மத்தோடு பூணூல் பிடித்து எழுதி தனது நஞ்சை கக்குகிறது.

நாட்டை திருத்துவதற்கு முன் ஈனமலர் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். 

நாளிதழ்களில் முதலில் ஆங்கில தலைப்பில் எழுதியது ஈனமலர். இதன் மூலம் தமிழ் மொழியை ஒழிக்க பார்க்கிறது. 

சூத்திரன்  'மது ' என்கிறான், ஈனமலரோ 'உற்சாக பானம்' என எழுதுகிறது. இதன் மூலம் பார்ப்பனர்கள் மதுவில் உற்சாகமாக மிதக் கிறார்கள் என்பது தெளிவாகிறது. 

சூத்திரனுக்கு கூட தெரியாத அசைவ வகைகளை பெயரோடு, வண்ணப் படத்தில் வெளியிட்டு தாங்களும் அசைவம் உண்கிறோம் என சொல்லாமல் சொல்கிறது ஏமாற்று ஈனமலர். 

தேசப் பற்று என்று ஏமாற்றிக் கொண்டு நடிகைகளின் படத்தை வெளியிட்டு அதற்கு அடுக்கு வசனங்கள் எழுதி ஈனபுத்தியை காட்டு கிறது பார்ப்பன இன ஈனமலர். 

காலை உணவுத் திட்டத்தை கொச்சைப் படுத்திய சேலம் தினமலர் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என எழுதுகிறது. மற்ற பகுதிகளில் வெளியாகும் இதழ்களில், தமிழ் மொழி, திராவிட இயக்கம், அதன் தலைவர்கள் மீது வன்மத்தை தொடர்ந்து கக்குவது ஏன்? 

நாட்டின் நான்காவது தூணாக திகழும் பத்திரிகை என்பது,அனைத்து மக்களும் படிக்கும் வகையில், அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில், அனைத்து தரப்பினரையும் மதித்து செல்வது , எவர் மனதையும் புண்படுத்தாது செல்வது தான் பத்திரிகை நியதி. ஆனால் இவைகளில் எதுவும் இல்லாமல் எதிர் மறையாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது இனமலர். 

காந்தியாரை கொன்று விட்டு இஸ்லாமியர் தான் கொன்றான் என  அன்று நாட்டையே ஏய்த்த  பார்ப்பனக்கூட்டம், இன்றும் ஏய்க்கப் பார்க்கிறது. 

பூணூல் இனமலரே, திராவிட இயக்கம் இன்றும், என்றும் விழிப்போடு தான் இருக்கும். என்பதை நினைவில் கொள்வது நல்லது. 

பார்ப்பானையும், பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி என்பார்கள். அந்த கூற்று எவ்வளவு மெய் என தெரிகிறது பூணூல் இன ஈனமலரின் செயலில். 

தின மலருக்கு தாழ்மையான வேண்டுகோள், தமிழை, திராவிட இயக்கத்தின் தலைவர்களை கொச்சைப் படுத்தி எழுத வேண்டாம். 

பத்திரிகை நியதிப் படி செயல்பட வேண்டும். அது தான் நாட்டிற்கு நீங்கள் செய்யும் உண்மையான சேவையாகும். 

- மு. சு. அன்புமணி
மதிச்சியம், மதுரை

No comments:

Post a Comment